சென்னை ஐஐடி மாணவர்களின் ரீ யூனியன்
சென்னை:சென்னை ஐஐடியில் 1981ம் ஆண்டு படித்த 200 மாணவ, மாணவியர் தங்களதுகுடும்பத்தினருடன் வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஒரே இடத்தில் கூடிதங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
இதுகுறித்து சென்னை ஐஐடி பழைய மாணவர் சங்க ஒருங்கிணைப்புக் குழுஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பழைய மாணவர்கள்சந்திக்கவுள்ளனர்.
200 மாணவர்கள் தவிர மேலும் 350 பேரும் இந்த விழாவில் பங்கேற்க விருப்பம்தெ>வித்துள்ளனர். ஐஐடி வளாகத்தில் இந்த சில்வர் ரீ யூனியன் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள பழைய மாணவர்களில் பெரும்பாலானவர்கள்இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். மேலும் அமெரிக்கா,இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகியநாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
சில்வர் ரீயூனியனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்திலும், வெளியிலும் இவை நடைபெறும்.
பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் ரூ. 1.27 கோடி வரை நிதி வசூலிக்கப்பட்டுபல்வேறு சமுக பணிகள், ஐஐடி சார்ந்த பணிகளுக்கு செலவிடப்படவுள்ளது. ஊரகப்பகுதிகளில் இன்டர்நெட் மையங்களை ஏற்படுத்துவது, ஊரக வளர்ச்சித் திட்டங்கள்இந்த பட்டியலில் உள்ளன.
சில்வர் ரீயூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் 1981ம் ஆண்டு பாட்ச்மாணவர்கள், சங்கத்தின் www.iitmaa.org என்ற இணையதளத்திலோ அல்லது 044-22578391 என்ற சங்க அலுவலகத்தின் தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் என்று தெ>வித்துள்ளார் பாண்டியன்.
அண்ணாமலை மாணவர்கள் சந்திப்பு:
இதேபோல சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1981ம் ஆண்டுபொறியியல் படிப்பை முடித்த மாணவர்களும் வெள்ளி விழா சந்திப்புக்குதிட்டமிட்டுள்ளனர்.
டிசம்பர் 23, 24 ஆகிய நாடுகளில் ஏற்காட்டில் இந்த விழாவுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் விழா ஏற்பாட்டாளர்முத்துவை 9840062539 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனசெய்திக்குறிப்பொன்றில் தெ>விக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications