நீதிபதிகள் நீக்கம் ரத்து: ஒருவர் இடமாற்றம்
சென்னை:நெல்லை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி நாகநாதன் மற்றும் மாஜிஸ்திரேட் நாகராஜன் ஆகியோரை சஸ்பெண்ட்செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நாகநாதன் இடமாற்றம் செய்யும்படி கோரியதால்அவர் மட்டும் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி நாகநாதன் மற்றும் 4வது குற்றவியல் மாஜிஸ்திரேட் நாகராஜன் ஆகியோர்கடந்த 8ம் தேதி நள்ளிரவில் பாளையங்கோட்டை காவல் நிலையம், கட்டுப்பாட்டு அறை, அரசு மருத்துவமைனஉள்ளிட்ட இடங்களுக்குச் சென்று போலீஸார் பணியில் இருக்கிறார்களா என்று சோதனை போட்டது பெரும்சர்ச்சையைக் கிளப்பியது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. நெல்லை வந்து விசாரணை நடத்திஅளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நெல்லை வக்கீல்கள் தொடர் வேலைநிறுத்தத்தில்குதித்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் போராட்டத்தில்குதித்தனர். மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்களும் போராட்டத்தில் குதிக்க ஆயத்தமாகினர்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் தணிகாச்சலம், தர்மாராவ்ஆகியோரை தலைமை நீதிபதி ஏ.பி. ஷா நியமித்தார். இரு நீதிபதிகளும் நெல்லை வந்து விசாரணைமேற்கொண்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட நீதிபதிகள், போலீஸார் ஆகியோரிடம் அவர்கள் விசாரணைநடத்தினர்.
பின்னர் இதுதொடர்பாக தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவிடம் அறிக்கை கொடுத்தனர். இதையடுத்து நேற்று இரவுஉயர்நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில், நீதிபதி நாகநாதனும், நீதிபதி நாகராஜனும் குடிபோதையில் நடந்து கொண்டதாக கூறப்பட்ட புகார்நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் அதிகார வரம்பை மீறி நடந்து கொண்டது நிரூபணமாகியுள்ளது.
குடிபோதையில் இவர்கள் நடந்து கொள்ளவில்லை என்பது நிரூபிக்கப்பட்டதால் அவர்களை சஸ்பெண்ட் செய்துபிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
நீதிபதி நாகநாதன் தன்னை இடமாற்றம் செய்யும்படி தானாகவே கேட்டுக் கொண்டதால் அவர் சென்னையில்உள்ள நீதித்துறை அகாடமியில் கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். நாகராஜன் தொடர்ந்துநெல்லையிலேயே பணிபுரிவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications