தமிழக டிராவல்ஸ் அதிபர் மலேசியாவில் கடத்தல்
சென்னை:மலேசியா சென்ற விழுப்புரம் டிராவல்ஸ் அதிபர் அந் நாட்டில் கடத்தப்பட்டார்.அவரை விடுவிக்க ரூ. 4 லட்சம் பிணைத் தொகையை வாங்குவதற்காக சென்னைஉதயம் தியேட்டர் அருகே வந்த கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கோவிந்தராஜ் சென்னை மத்தியகுற்றப்பிரிவு துணை கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில்,
என் அண்ணன் சுப்பிரமணி (38), பெரம்பலூரைச் சேர்ந்த அவரது நண்பர்செந்தில்குமார் ஆகியோர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர். மேலும் சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜென்டுகளாகவும்இருந்து வந்தனர்.
ஆனால், தொழிலில் கருந்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். செந்தில்குமார்மலேசியா போய்விட்டார். சுப்பிரமணி தனியாக டிராவல்ஸ் நட்த்தி வந்தார்.வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்காகசுப்பிரமணி அடிக்கடி மலேசியா செல்வார்.
சில நாட்களுக்கு முன்பு மலேசியா சென்ற சுப்பிரமணியை செந்தில்குமாரும் அவரதுநண்பர்களும் கடத்தி விட்டனர். என்னை தொலைபேசி மூலம் அழைத்து தாங்கள்சொல்லும் சென்னை நபரிடம் ரூ.4 லட்சம் கொடுத்தால் உன் அண்ணனைவிடுவிப்பதாக மிரட்டினர்.
இதையடுத்து நிலத்தை விற்று ரூ. 3 லட்சத்தை எடுத்துக் கொண்டு சென்னைவந்துள்ளேன். உதயம் தியேட்டர் அருகே 2 நபர்கள் வருவதாகக் கூறியுள்ளனர்.அவர்களிடம் பணத்தை கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கடத்தல்காரர்கள் குறிப்பிட்டஇடத்துக்கு கோவிந்தராஜூடன் அங்கு சென்றனர். கோவிந்தராஜிடம் பணத்தைவாங்குவதற்காக வந்த நபர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள்இருவரும் செந்தில்குமாரின் நண்பர்கள் ராமராஜ், மைக்கேல்ராஜ் என தெரியவந்தது.
பணத்தை வாங்கிவிட்டோம் சுப்பிரமணியை விட்டுவிடுங்கள் என்றுசெந்தில்குமாரிடம் கூறுமாறு அவர்களிடம் போலீசார் கூறினார். அவ்வாறேஅவர்களும் கூறினார்.
ஆனால், சுப்பிரமணியை செந்தில்குமார் மலேசியாவில் விடுவித்து விட்டாரா என்றுஉடனடியாகத் தெரியவில்லை. மலேசிய தூதரகம் மூலமாக அவரை பத்திரமாகசென்னைக்கு கொண்டு வரும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications