தர்மபுரி பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கல்?
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:தர்மபுரி காட்டுப் பகுதிகளில் நக்சலைட்குள் பதுங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால்அந்தப் பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்ற மணி, நவீன் பிரசாத், சந்திரா, காளிதாஸ் ஆகிய நக்ஸல்கள்கடந்த 10 ஆண்டுகளாக போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
தற்போது இந்த 4 பேரும் தர்மபுரி மாவட்ட காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக உளவுப் பிரிவினருக்கு தகவல்கிடைத்துள்ளது. இதையடுத்து நக்சலைட்டு பிரிவு போலீசார் மற்றும் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்புஅதிரடிப்படை போலீசார் இணைந்து தர்மபுரி மாவட்ட காட்டுப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில்ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியில் உள்ள மலை கிராமங்களிலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications