சாந்திக்கு ஆதரவாக திரளும் அரவாணிகள்
![]() |
சென்னை:பாலினச் சரச்சையில் சிக்கிய தடகள வீராங்கனை சாந்திக்கு ஆதரவாக அரவாணிகள் குரல் கொடுத்துள்ளனர்.
தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்சாந்தி. இந்தப் போட்டிக்குப் பின்னர் நடத்தப்பட்ட பாலினச் சோதனையில் அவருக்கு பெண்களுக்கு இருக்கவேண்டிய ஹார்மோன் அளவு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட பதக்கத்தைப் பறிக்க ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்தது.இதுதொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கடிதம் அனுப்பியது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்ட இந்திய ஒலிம்பிக் சங்கம், சாந்திக்கு வழங்கப்பட்ட பதக்கத்தைத்திரும்ப்ப பெறுமாறு இந்திய தடகளச் சங்கத்திற்கு உத்தரவிட்டது.
சாந்தி விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் சாந்திக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 15லட்சம் ரொக்கப் பரிசை முதல்வர் கருணாநிதி திட்டமிட்டபடி சாந்தியிடம் வழங்கினார். அத்தோடு அவரது குடும்பவருமையை கருத்தில் கொண்டு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்மா தொலைக்காட்சியையும் வழங்கினார்.சாந்திக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்த பரிசு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் சாந்திக்கு பல்வேறு அரவாணிகள் ஆதரவு தெரிவித்து குரல் எழுப்பியுள்ளனர். தமிழ்நாடுஅரவாணிகள் சங்கத் தலைவர் ஆஷா பாரதி கூறுகையில், இந்த விவகாரத்தை சாந்தி வெளிப்படையாக கிளப்பமுன்வந்தால் அவருக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
![]() |
சாந்தியின் ஹார்மோன் பிரச்சனையை சுட்டிக் காட்டி அவரை ரயில்வே நிர்வாகம் வேலைக்கு எடுக்க மறுத்ததாகத்தெரிகிறது. இது குறித்து தகவல் சேகரித்து வருகிறோம். விரைவில் ரயில்வே துறைக்கு எதிராக நீதிமன்றத்திலும்வழக்கு போடுவோம். ரயில்வேயில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆணா, பெண்ணா என்றுபாலியல் சோதனை நடத்தக் கோருவோம்.
சாந்திக்காக நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குப் போடவும் எங்களது சங்கம் தயாராக உள்ளது. விளையாட்டுஉள்பட எந்தத் துறையாக இருந்தாலும் இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்கள் தங்களது விருப்பபடி அதில் ஈடுபடஅரசு உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.
நீண்ட நெடுங்காலாக நிலவி வரும் இந்தப் பிரச்சினைக்கு இப்போது முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்படவேண்டும். அப்போதுதான் அரவாணிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றார் பாரதி.
பிரபல நடனக் கலைஞரும், அரவாணியுமான நர்த்தகி நடராஜ் கூறுகையில், சாந்திக்கு தமிழக அரசு ஆதரவும்,பரிசும் வழங்கியுள்ளது ஆறுதல் தருகிறது.
15 ஆண்டுகளுகு முன்பு நான் அரவாணியானபோது எனது சொந்த் தாயாரே என்னை நிராகரித்தார். அரவாணிசமூகத்துடன் நான் இரண்டறக் கலக்க அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. யார் யார் எந்த பாலினத்தில் இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் வந்து விட்டது. சாந்தி விவகாரம் ஒரு மிகப் பெரிய மைல் கல் என்றேநான் நினைக்கிறேன் என்கிறார் நடராஜ்.
அரவாணிகள் குறித்து சமீபத்தில் டாக்குமென்டரிப் படத்தைத் தயாரித்த முதல் அரவாணியான பிரியா பாபுகூறுகையில், எங்களுக்கென்று ஒலிம்பிக் போட்டியோ, ஆசிய விளையாட்டுப் போட்டியோ நடத்துகிறார்களா,இல்லை! அப்படி இருக்கையில் தனது திறமையை நிரூபித்த சாந்தியை புறக்கணிப்பது எப்படி நியாயமாகும்?என்கிறார்.
சாந்திக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரவாணிகள் சங்கங்களும் குரல் கொடுக்கஆரம்பித்துள்ளனர். விரைவில் சாந்திக்காக இவர்கள் போராட்டங்களை நடத்தவும் தயாராகி வருவதாகதெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications