சென்னை அருகே 400 ஏக்கரில் மருத்துவப் பூங்கா
டெல்லி:சென்னை அருகே 400 ஏக்கர் பரப்பளவில் மருத்துவப் பூங்கா மற்றும் தடுப்பூசிமருந்து பூங்கா அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அன்புமணி இதுகுறித்துப் பேசுகையில், சென்னைஅருகே 400 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மருத்துவப் பூங்கா மற்றும் தடுப்பூசிமருந்துப் பூங்கா அமைக்கப்படும்.
இந்த வளாகத்தில், உலகப் புகழ் பெற்ற மருந்து நிறுவனங்கள், தடுப்பூசி மருந்துநிறுவனங்கள் தங்களது தயாரிப்புப் பிரிவுகளை தொடங்க அனுமதிக்கப்படுவர். இதன்மூலம் மருந்துகள் மற்றும் தடுப்பூசி மருந்துகளின் விலை வெகுவாக குறையும்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போலவே இந்த மருந்துப் பூங்காவும்கருதப்படும். இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் உள்ளூர்பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்படும். இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படமாட்டாது. ஒரு ஆண்டில் இந்த மருத்துவப் பூங்கா செயல்பாட்டுக்கு வரும்.
நமது நாட்டில், மருத்து பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான செலவு மிகவும் அதிகமாகஉள்ளது. எம்.ஆர்.ஐ உள்ளிட்ட ஸ்கேன் கருவிகள் 90 சதவீதம்வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால்பரிசோதனைக்காக அதிக தொகையை செலவிட நேரிடுகிறது.
இதே கருவிகளை இங்கே தயாரித்தால் அவற்றின் விலை மிக மிக குறைவாகஇருக்கும். இதன் மூலம் பரிசோதனைக்கான கட்டணமும் வெகுவாக குறையும்.
இதேபோல, சுகாதார இன்சூரன்ஸ் பிரிவையும் மக்களுக்காகத் தொடங்க சுகாதாரஅமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அடுத்த மாதம் உயர் மட்டக் குழுக்கூட்டம் நடைபெறுகிறது. அதன் பின்னர் பிரதமருடன் இதுகுறித்து விவாதித்து இறுதிமுடிவு எடுக்கப்படும்.
சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் நமது நாடு மிகப் பெரிய வளர்ச்சியைக்கண்டுள்ளது. நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், முதலீட்டாளர்கள்மருந்து மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகளை நிர்ணயிக்க வேண்டும்.
யோகாசனம் மூலம் எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியும் என்பதுஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே யோகா மூலம் எய்ட்ஸ், எச்ஐவிவைரஸ் பாதிப்பை குணப்படுத்த முடியும் என்று யோகா நிபுணர் குரு ராம்தேவ்கூறுவதை ஏற்க முடியாது.
அப்படி முடியும் என்றால் அதை அவர் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும்.யோகா மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக அவரை நான்நிச்சயம் பாராட்டுகிறேன்.
யோகா மூலம் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை குணப்படுத்தமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் எய்ட்ஸ், புற்றுநோய் ஆகியவற்றைகுணப்படுத்த முடியும் என்று எங்குமே நிரூபிக்கப்படவில்லை.
ஆனால் முடியும் என ராம்தேவ் நினைத்தால் அதை தாராளமாக அறிவியல்பூர்வமாகஅவர் நிரூபிக்கட்டும். நாங்கள் அதைத் தடுக்கவில்லை. அப்படி நிரூபிக்கப்பட்டால்அவருக்கு உதவ அரசே முன்வரும். ஆனால் நிரூபிக்கப்படாத ஒரு விஷயத்தை,குணப்படுத்த முடியும் என்று கூறி வருவதை அவர் முதலில் நிறுத்த வேண்டும்.
இதுதொடர்பாக சுவாமி ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து எனக்குத்தெரியாது. ஆனாலும் அது முறைப்படிதான் அனுப்பப்பட்டிருக்கும் எனநினைக்கிறேன் என்றார் அன்புமணி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications