உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் முதல் தலித்

Subscribe to Oneindia Tamil
K.G.Balakrishanan

டெல்லி:உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஜி.பாலகிருஷ்ணன் அடுத்த மாதம்பொறுப்பேற்கிறார். இந்தப் பதவிக்கு வரும் முதல் தலித் இவர் தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.

நாடு சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் நாட்டில் பெரும்பான்மையாகஉள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியைஇப்போது தான் எட்டிப் பிடிக்கிறார்.

இப்போது தலைமை நீதிபதியாக உள்ள ஒய்.கே.சபர்வால் அடுத்த மாதம் 14ம் தேதிஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியானகே.ஜி.பாலகிருஷ்ணன் இப்பொறுப்பை ஏற்பார்.

தலைமை நீதிபதியாகும் பாலகிருஷ்ணன் கேரளாவைச் சேர்ந்தவராவார்.

குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டு வரை இவர் இந்தப் பதவியில் இருப்பார்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருப்பவர் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பதுஎன்ற மரபு எமர்ஜென்சி காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வரும் மரபாக உள்ளது.

ஆனால், கடந்த 1975ம் ஆண்டு மூன்று மூத்த நீதிபதிகளை ஓரங்கட்டி விட்டு,ஏ.கே.ராய் என்பவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதைக் கண்டித்து,மூன்று நீதிபதிகள் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+