ஜெ. மீதான 2 கோடி பரிசு வழக்கு தள்ளிவைப்பு
சென்னை:முதல்வராக இருந்தபோது தனக்கு பிறந்த நாள் பரிசாக வந்த ரூ. 2 கோடிக்கான டி.டிக்களை தனது கணக்கில்வரவு வைத்துக் கொண்டது தொடர்பாக ஜெயலலிதா மீது சிபிஐ தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் ஜனவரிமாதத்திற்கு தள்ளி வைக்கபட்டுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளன்று வெளிநாட்டில் இருந்துரூ. 2.89 கோடிக்கு டி.டிக்கள் அவருக்கு வந்தன. முதல்வராக இருப்பவருக்கு வரும் பரிசுகள் அரசிடம்சேர்க்கப்பட வேண்டும்.
ஆனால், இந்தப் பணத்தை மொத்தமாக தனது கணக்கில் ஜெயலலிதா வரவு வைத்துக் கொண்டார். இதுதொடர்பாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியதையடுத்து சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அழகுதிருநாவுக்கரசு ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்குவிசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்க வேண்டும் என்று செங்கோட்டையன், அழகுதிருநாவுக்கரசு இருவரும் ஏற்கெனவே மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் இன்று நீதிபதி மீனாட்சி சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது இந்த மனுக்களுக்குபதில் அளிக்க கால அவசாகம் கோரினார் சிபிஐ வழக்கறிஞர். இதைத் தொடர்ந்து வழக்கை ஜனவரி 22ம்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications