மாருதியை விட்டு விலகும் மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:மாருதி கார் நிறுவனத்தில் இருந்து முழுமையாக பங்குகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

Maruti Swift

கடந்த 1981ம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த சுசூகி கார் தாயரிப்பு நிறுவனமும், மத்திய அரசும் கூட்டுச் சேர்ந்து,மாருதி உத்யோக் என்ற பெயரில் கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவின.

இந்த நிறுவனத்தின் மூலம் தான் இந்தியாவில் முதல் முறையாக பட்ஜெட் கார்கள் தயாரிக்கப்பட்டது. மாருதிகார்கள் இந்திய சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தின.

கடந்த ஜனவரி மாதம், மாருதி நிறுவனத்தில் உள்ள தன்னுடைய எட்டு சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனைசெய்தது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 678.24 கோடி கிடைத்தது. ஏற்கனவே, கடந்த 2003ம் ஆண்டும்மத்திய அரசு தனது 27.5 சதவீத பங்குகளை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் மாருதி நிறுவனத்தில் மீதம் உள்ள தன்னுடைய 10.27 சதவீத பங்குகளையும் மொத்தமாகவிற்றுவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ. 2,700 கோடி கிடைக்கும். டெல்லியில்கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மாருதி நிறுவனத்தில் இருந்து மத்திய அரசு விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளநிலையில், அதன் பங்கு விற்பனை 1.84 சதவீதம் கூடியுள்ளது.

மும்பை பங்கு சந்தையில் மாருதி நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ. 940 என விற்பனையானது. மாருதி நிறுவனத்தில்ஜப்பானின் சுசூகி மோட்டார் நிறுவனத்தின் பங்குகள் 54.2 சதவீதம் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+