வைகோவை அம்பலப்படுத்துவேன்: எல்.ஜி.
![]() |
சென்னை:10 விதமான பிரச்சினைகளுக்கு கருணாநிதியிடம் 10 முறை என்னை தூது அனுப்பினார் வைகோ.தேவைப்பட்டால் அதை வெளியிட்டு வைகோவை அம்பலப்படுத்துவேன் என்று மதிமுக அவைத் தலைவர்எல்.கணேசன் கூறியுள்ளார்.
வைகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள எல்.கணேசனும், அவருடன் சேர்ந்து துணைக் கொடிஉயர்த்தியுள்ள செஞ்சி ராமச்சந்திரனும் இணைந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது எல்.ஜி கூறுகையில், இதுவரை மதிமுகவின் அத்தனை பொதுக் குழுக் கூட்டங்களுக்கும் நான்தான்தலைமை தாங்கியுள்ளேன். இப்போதும் நான் அவைத் தலைவராகத்தான் இருக்கிறேன்.
எனவே 25ம் தேதி கூட்டப்பட்டிருக்கும் கூட்டத்திற்கும் நான்தான் தலைமை தாங்குவேன். அத்துமீறிகூட்டத்திற்குள் நுழையும் பேச்சுக்கே இடமில்லை. நான் இன்னும் அவைத் தலைவர்தான். கட்சியின் சட்டதிட்டத்தின்படி அவைத் தலைவர்தான் கூட்டத்திற்குத் தலைமை தாங்க வேண்டும்.
வைகோவை ஜெயலலிதா 19 மாதங்கள் சிறையில் வைத்திருந்தார். அப்போது அவருக்கு ஏற்பட்ட சுமார் 10 வகையானபிரச்னைக்காக என்னை சுமார் 10 தடவை கருணாநிதியிடம் தூது அனுப்பினார் வைகோ. அப்போது அவருக்கிருந்தபிரச்னையில் இருந்து அவரை காப்பாற்றியதே கருணாநிதி தான். ஆனால் அவரை சிறையில் அடைத்து வைத்திருந்தஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்தார் வைகோ.
வைகோ பற்றிய பல உண்மைகள் எனக்கு தெரியும். ஆனால் அவரை நான் காட்டிக்கொடுக்க மாட்டேன். ஆனால் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் உண்மைகள் எல்லாவற்றையும் சொல்லி விடுவேன் என்றார் எல்.ஜி.
செஞ்சி ராமச்சந்திரன் கூறுகையில், இன்று காலை 3 மாவட்ட செயலாளர்களுடன் விவாதித்துள்ளோம். இன்னும்சிலரை தொலைபேசியில் கலந்து பேசி வருகிறோம். இன்னும் 2 பேர் பேசுவதற்காக வந்து கொண்டுள்ளனர்.அனைவருடனும் பேசி முடித்த பிறகு நல்ல முடிவாக எடுப்போம் என்றார்.
கருணாநிதியை சந்திக்கிறார் எல்.ஜி.
முன்னதாக டெல்லி சென்றிருந்த எல்.ஜி. நேற்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்போதுவிரிவாக எதையும் கூற முடியாது. 40 ஆண்டு காலம் என்னுடன் பழகியவர்களையும், 13 ஆண்டு காலம் என்னுடன் மதிமுகவில் இணைந்து பழகியவர்களையும்சந்தித்துப் பேசவுள்ளேன்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு இன்று நல்ல முடிவாக எடுத்து அதை உங்களுக்குச் சொல்கிறோம். முதல்வர் கருணாநிதியையும் சந்திப்பேன். அதில் எந்தத்தயக்கமும் இல்லை. சந்தேகம் வேண்டாம் என்றார் கணேசன்.
கண்டன போஸ்டர்கள்-திருச்சியில் அடிதடி:
இதற்கிடையே, எல்.ஜி.யை கடுமையாக கண்டித்து திருச்சி முழுவதும் மதிமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். வைகோ தனித்தன்மையை இழக்கவில்லை.திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களே (எல்.ஜி) கட்சியை விட்டு வெளியேறுங்கள் என்று அந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்.கணேசனின் எம்.பி. அலுவலகம் உள்ள பகுதியிலும் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இவற்றை கணேசன் அலுவலக ஊழியர்கள்கிழித்து எறிந்தனர்.
இந்த நிலையில் திருச்சி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் மலர் மன்னன் தலைமையில் நடந்தது. இதில்வைகோவின் கரத்தை பலப்படுத்த, எந்தவிதமான விருப்பு வெறுப்புகளுக்கும் ஆட்படாமல், முன்பை விட தீவிரமாக செயல்பட வேண்டும் என்றுதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் பேசிய அனைவருமே எல்.கணேசனை கடுமையாக விமர்சித்துப் பேசினர். ஆனால் ஒரே ஒரு பகுதி செயலாளர் மட்டும் எல்.ஜி.க்குஆதரவாக பேச முயன்றார். இதையடுத்து கூட்டத்தினர் அவரை நோக்கிப் பாய்ந்து சரமாரியாக அடிக்க முயன்றனர்.
பின்னர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தலையிட்டு அவர்களை விலக்கி அந்த பகுதி செயலாளரை அங்கிருந்து வெளியேறுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டனர். இதனால் பெரிய ரசாபாசம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications