பிரதமருடன் இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பிக்கள் இன்று சந்தித்துப் பேசினர்.

இலங்கை தமிழ் எம்.பிக்களான ஆர்.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சேனாதி ராஜா செல்வம், அடைக்கலநாதன், கஜேந்திரன் பொன்னம்பலம் ஆகியோர் நேற்று சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.

ஈழத்தில் தமிழர்கள் பட்டு வரும் அவதியை எடுத்துக் கூறிய அவர்கள் இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின்தலையீடு மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினர்.

அவர்களது கோரிக்கைகளை கேட்ட முதல்வர் இதுகுறித்து மத்திய அரசிடம் விரிவாக எடுத்துக் கூறுவதாகதெரிவித்தார். இச் சந்திப்பின்போது சுப.வீரபாண்டியனும் உடன் இருந்தார். மேலும் பிரதமருடனும் உடனடியாகதொலைபேசியில் பேசினார். இந்த எம்பிக்களை சந்திக்குமாறும் பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்தார்.

இந் நிலையில் இலங்கை தமிழ் எம்.பிக்கள் டெல்லி சென்று இன்று பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்தனர்.இந்தக் குழுவில் சுப.வீரபாண்டியனும் இடம் பெற்றிருந்தார்.

இலங்கையில் தற்போது அமைதியின்மையை நிலவி வருவதையும், அங்கு விரைவில் அமைதியான சூழ்நிலைஏற்பட இந்திய அரசு விரைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரமதரிடம் தமிழ் எம்.பிக்கள்எடுத்துக் கூறினர்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கையைச் சேர்ந்த தமிழ் குழு ஒன்று பிரதமரை சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை இவர்களை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால்,நாராயணன் போன்ற அதிகாரிகள் தலையிட்டு அதைக் கெடுத்தனர்.

இம்முறை முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் இவர்களால் பிரதமரை சந்திக்க முடிந்துள்ளது.

ஈழத் தமிழர் பிரச்சினையில் இதுவரை இலங்கை அரசுக் குழுவே இதுவரை மத்திய அரசை சந்தித்து வந்தது. தமிழ்எம்.பிக்கள், தமிழர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை சந்திக்க மத்திய அரசு மறுத்தே வந்தது. இந் நிலையில்தற்போது தமிழ் எம்.பிக்கள் குழு பிரதமரை சந்தித்துள்ளது மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

வரட்டும் விடியல்-கருணாநிதி

இதற்கிடையே இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்துள்ளோரின்பிள்ளைகளுக்காக சமீபத்தில் சென்னையில் இலங்கை அரசு சிறப்பு தேர்வுக்கு ஏற்பாடுசெய்தது. இதற்கான முழு உதவிகளையும், ஒத்துழைப்பையும் தமிழக அரசு செய்துகொடுத்தது.

இதற்காக முதல்வர் கருணாநிதியை சந்தித்து அந்த மாணவ, மாணவியர் நேரில்சந்தித்து நன்றிகளைத் தெரிவித்தனர்.

அவர்களிடம் கருணாநிதி பேசுகையில்,கடந்த 10, 15 ஆண்டுகளாகஉங்களையெல்லாம் வாழ வைப்பதற்காக, உங்களுடைய கடமைகளை ஆற்றுவதற்கு,உங்கள் எதிர்காலத்தை செதுக்குவதற்கு, நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள்தான்நடைபெற்றிருக்கிறதே அல்லாமல் உங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி, நீங்கள்இன்று என்னை வந்து பார்த்தது போல நான் வந்து உங்களை பார்க்கிற ஒரு காலம் வரவேண்டுமே என்ற கவலை எனக்கு உண்டு.

ஏனோ தெரியவில்லை, நான் பலமுறை முயன்றும் என்னால் இலங்கைக்கு வரமுடியவில்லை. இதுவரை இலங்க்ைகு நான் வர எடுத்துக் கொண்ட முயற்சிகள்எல்லாம் தோல்வியில்தான் முடிந்துள்ளன.

சில நேரங்களில் அங்குள்ள குழப்பங்கள் காரணமாக நீங்கள் வருவதற்கேற்றசாதகமான நிலை இல்லை என்று எனக்கு இலங்கை அரசு தகவல் அனுப்பும். சிலமுறை இந்திய அரசு தடுத்து விடும். நான் ஒருமுறை இந்திரா காந்தி அம்மையாரிடம்இதைச் சொன்னபோது, நான் ஏற்பாடு செய்யட்டுமா, நீ போய் வருகிறாயா என்றுஎன்னிடம் கேட்டார்கள்.

அப்போது இலங்கையில் இப்போதிருப்பதை விட அதிகமாகக் கொந்தளிப்பானசூழ்நிலை. எனவே அந்தப் பயணமும் தடைபட்டுப் போனது.

இலங்கையில் பல பெரியவர்கள் அமைதிச் சூழ்நிலையை உருவாக்கபாடுபட்டுள்ளனர். நம்முடையை சந்திரஹாசன் அவர்களின் தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம் போன்றவர்களும், எத்தகைய முயற்சிகளலேஈடுபட்டார்கள் என்பதை நான் நன்கறிவேன்.

இலங்கையில் சமஷ்டி அரசு அமைய வேண்டும் என்று முதன் முதலில் குரல்கொடுத்தவர் தந்தை செல்வாதான். அவர் என்னை சென்னையில் வந்து சந்தித்தைஇப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

இலங்கைக்கும் எனக்கும் உள்ள உறவு வரலாற்று ரீதியாக, இலக்கிய ரீதியாக என்றும்பட்டுப் போகாத ஒன்றாக இருக்கிறது. பசுமையான ஒன்றாக உள்ளது. இலங்கையைமையமாக வைத்து பாயும் புலி பண்டார வன்னியன், புதையல் என கதைகளைக் கூடநான் எழுதியிருக்கிறேன்.

என்றென்றும் உங்களுக்காக நான் என்னுடைய கடமையை ஆற்றிக்கொண்டிருப்பேன். விரைவில் விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இங்கேதமிழகத்திற்கு வந்து படித்து ஓரளவு பயிற்சியும் பெற்றிருக்கிற உங்களை வழியனுப்பிவைக்கிறேன்.

இப்போது தற்காலிகமாகத்தான் வழியனுப்ப முடியும். விரைவில் உங்களையெல்லாம்மகிழ்ச்சிகரமாக தமிழகத்திலிருந்தே வழியனுப்பி வைக்கிற அந்த நாள் வரட்டும்என்றார் கருணாநிதி.

வாகரை- 20000 தமிழர்கள் வெளியேற்றம்

இந் நிலையில் வாகரையில் இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதால் அங்கிருந்து இதுவரை20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

வாகரைப் பகுதியில் இலங்கைப் பாதுகாப்பபுப் படைகள் தொடர்ந்து அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும், படையினருக்கும்இடையே நடந்து வரும் சண்டையால் வாகரையிலிருந்து தமிழர்கள் பாதுகாப்பானஇடங்களைத் தேடி ஓடி வருகின்றனர்.

வாகரையிலிருந்து கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 20,000க்கும் மேற்பட்டதமிழர்கள் வெளியேறியுள்ளனர். அனைவரும் கிழக்கு மட்டக்களப்பு, வெளிச்சேனைஆகிய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

வாகரையிலிருந்து கிட்டத்தட்ட 12 முதல் 15 கிலோமீட்டர் தூரம் வரை அடர்ந்தகாடுகள் வழியாக நடந்தே இந்தப் பகுதிகளை அவர்கள் அடைந்துள்ளனர். இவர்கள்தங்குவதற்காக 31 பள்ளிகளை அரசு ஒதுக்கியுள்ளது.

இவர்களுக்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட பிற வசதிகளை அரசு செய்து தந்துள்ளது.தற்போது தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ள பகுதிகள் அரசு வசம் உள்ள பகுதிகள்ஆகும்.

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் தமிழர்களைகட்டாயப்படுத்தி அரசுப் பகுதிகளுக்கு இலங்கை ராணுவம் கொண்டு வருவதாகவும்ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்திவிட்டு அதன் பிறகு பெரும் தாக்குதலை தொடுக்கலாம் என ராணுவம்திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவேதான் தற்போது புலிகள் வசம் உள்ள பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் அதிகஅளவு தங்களது பகுதிக்கு வருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயலுகிறதுஇலங்கை அரசு என்று கூறப்படுகிறது.

திக மனித சங்கிலி-திமுக பங்கேற்பு:

இந் நிலையில் ஈழத் தமிழர் வாழ்வுரிமையை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் இன்று நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் திமுகவும்பங்கேற்றது.

சென்னையில் தி.க தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பங்கேற்றார்.மேலும் பாமக, விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்றன.

ஈழத் தமிழர் தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகளான பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவை நடத்திய போராட்டங்களில் திமுக பங்கேற்காமல்இருந்து வந்தது. இந்த நிலையில் தி.க போராட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் திமுகவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+