சுனாமி குழந்தைகளை சந்தித்த ரோஜர் பெடரர்
கடலூர்:ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக தமிழகம் வந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர்பெடரர், கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தகுழந்தைகளை சந்தித்துப் பேசி மகிழ்ந்தார்.
ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக ரோஜர் பெடரர்நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இந்தியா வந்த பெடரர், நேற்று கடலூர்மாவட்டம் தாழங்குடாவுக்குச் சென்றார்.
![]() |
அங்கு சுனாமியால் உற்றார், உறவினர், பெற்றோர்களை இழந்து அரசுக் காப்பகத்தில்தங்கியுள்ள குழந்தைகளை அவர் சந்தித்தார். தனது தோழி மிர்காவுடன் வந்திருந்தபெடரர், அக்குழந்தைகளிடம் ஜாலியாக பேசினார்.
பாடச் சொல்லி ரசித்தார், ஆடச் சொல்லி சந்தோஷப்பட்டார். பின்னர் அவர்களிடம்சுனாமிக்குப் பிறகு உங்களது மன நிலை எப்படி உள்ளது, நன்கு படிக்கிறீர்களா,உங்களுக்கு தேவையானவை எல்லாம் கிடைக்கிறதா என்று பேசினார் பெடரர்.
ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகள் நடத்திய கலை நிகழ்ச்சியையும்பெடரரும், மிர்காவும் ரசித்துப் பார்த்தனர். தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த அபினயா(3) என்ற குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு பெடரர் இந்த கலை நிகழ்ச்சியைரசித்தார்.
![]() |
பின்னர் செய்தியாளர்களிடம் பெடரர் பேசுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்டபகுதிகளில் நிவாரணம் மற்றும் மறு சீரமைப்புப் பணிகள் எந்த அளவுக்குநடந்துள்ளன என்பதைப் பார்வையிடவே நான் வந்துள்ளேன். இந்தியாவுக்குஇப்போதுதான் வந்துள்ளேன்.
தமிழகத்தில் சுனாமி நிவாரணப் பணிகள் மிகச் சிறப்பாக நடந்துள்ளது மகிழ்ச்சிஅளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தப் பகுதிகள் மிகப் பெரிய மாற்றத்தைசந்தித்துள்ளன.
2 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி தாக்கியபோது நான் துபாயில் இருந்தேன்.தொலைக்காட்சியில் ராட்சத அலைகள் மக்களையும், நிலப்பரப்பையும் தாக்கியதைப்பார்த்து நான் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன். இப்போது அந்தப் பகுதிகளை நேரில்பார்த்தபோது, அந்த பாதிப்பிலிருந்து மக்கள் வெகுவாக வெளிவந்து விட்டார்கள்என்பதை அறிந்து வியப்புற்றேன் என்றார் பெடரர்.
முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடியை பெடரர் சந்தித்தார்.பெடரருக்கு, சுனாமி பாதிப்பு குறித்து புகைப்படங்கள் மூலம் ஆட்சித் தலைவர் பேடிவிளக்கினார். அதன் பின்னர் அவர் தாழங்குடா புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையே, பெடரர் குழந்தைகளுடன் சந்திக்கும் நிகழ்ச்சியை சேகரிக்க இந்தியசெய்தியாளர்களை அனுமதிக்க யுனிசெப் அதிகாரிகள் முதலில் மறுத்தனர். இதனால்அவர்களுக்கும் நமது செய்தியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.சுமார் 1 மணி நேர போராட்டத்துக்குப் பின்னரே நமது நாட்டு செய்தியாளர்களுக்குஅனுமதி கிடைத்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக














Click it and Unblock the Notifications