கிறிஸ்துமஸ்: கலாம், தலைவர்கள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர்மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, ஆளுநர் பர்னாலா, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துச் செய்தியைவெளியிட்டுள்ளனர்.

உலகெங்கும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.கிறிஸ்துமஸைக் கொண்டாட உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் தயாராகிவருகின்றனர்.

இந்த நிலையில், கிறிஸ்தவ மக்களுக்கு தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்:

கிறிஸ்துமஸ் திருவிழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், நமது இதயத்திலும்,எண்ணத்திலும் அன்பு, இரக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை பொங்கிப் பெருகட்டும்.

அமைதியும், மத நல்லிணக்கமும் நமது மனதில் பரவட்டும். இயேசு கிறிஸ்துவின்புனித வாழ்க்கையை நாம் அனைவரும் நினைவு கூர்ந்து அதன்படி நடக்கமுயல்வோம்.

குடியரசுத் துணைத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத்:

அன்பு, அமைதி, பொறுமை, சகிப்புத் தன்மையை இயேசு கிறிஸ்து மக்களுக்குக்காட்டினார். அவரது போதனைகள், மனிதகுலம் சந்திக்கும் அனைத்துப்பிரச்சினைகளுக்கும் ஏற்ற தீர்வாக உள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்:

கிறிஸ்துவ மக்களுக்கு மட்டுமல்லாது அனைத்து மதத்தினருக்கும் பொருத்தமான,சந்தோஷ விழா கிறிஸ்துமஸ்.

பரிசுகளையும், இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாது,அன்பையும், நட்பையும், கருணையையும் பகிர்ந்து கொள்ளும் திருநாள்தான்கிறிஸ்துமஸ். இந்த கிறிஸ்துமஸ், அமைதி, மகிழ்ச்சியை அனைவருக்கும்கொடுக்கட்டும்.

ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா:

அன்பையும், பொறுமையையும் போதிக்கும் கிறிஸ்துமஸ் தினத்தன்று அமைதி,சகோதரத்துவம், மத நல்லிணக்கம் திகழ் பாடுபடுவோம்.

முதல்வர் கருணாநிதி:

தனது கன்னத்தில் அறைந்தவரிடம் கூட மனித நேய உணர்வை விதைத் மனிதப்புனிதர் இயேசு. அமைதி தவழ, சகிப்புத்தன்மை வளர, ஒற்றுமை உணர்வு பெருகஉழைப்போம்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலலிதா:

மக்களுக்காக உயிர் நீத்த இயேசு பிறந்த நன்னாளில், மகிழ்ச்சியுடனும், எல்லாநலன்களும் பெற்று வளமுடன் வாழ்த்துகிறேன். வன்முறை, அநீதி,கொடுங்கோன்மை, மோதல்கள் மாறி மத நல்லிணக்கம், மனித நேயம், ஒருமைப்பாடுதழைத்தோங்க உறுதி எடுப்போம்.

அன்பு, சகோதரத்துவம், சமாதானத்தைக் கடைப்பிடிப்போம். தியாகம், சேவைமனப்பான்மை, பொறுமை, சகிப்புத்தன்மை பெற பாடுபடுவோம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

வேற்றுமை மறந்து, பூசல் மறைந்து, சமய நல்லிணக்கம், சகோதரத்துவம் தழைக்கஇந்த நன்னாளில் உறுதி எடுப்போம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்டதலைவர்களும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+