அணு ஆயுதம்: ஈரான் மீது ஐ.நா. தடை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை ஈரான் கைவிட மறுத்து விட்டதால், அந்நாட்டின்மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.

ஈரான் தனது அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த வேண்டும். செறிவூட்டப்பட்டயுரேனியத்தை தயாரிக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன.

ஆனால் எங்களது சொந்தப் பாதுகாப்பு விவகாரங்களில் தலையிட அமெரிக்காஉள்ளிட்ட நாடுகளுக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய ஈரான், அமெரிக்காவின்கோரிக்கையை நிராகரித்தது.

இதையடுத்து நேற்று ஈரானுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து தீர்மானம்நிறைவேற்றியது. இதுதொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் அனைத்துஉறுப்பினர்களின் ஆதரவுடன் (15-0) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இந்த தீர்மானத்தை அப்படியே தாக்கல் செய்தால் அதை ஏற்க மாட்டோம்என ரஷ்யா தெரிவித்தது. இதையடுத்து ரஷ்யா கூறிய சில திருத்தங்கள் நீண்டவிவாதத்திற்குப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து தீர்மானத்தைஆதரித்து ரஷ்யாவும் ஓட்டுப் போட்டது.

இந்த தடையின் மூலம் யுரேனியம் செரிவூட்டும் பணிகளை ஈரான் மேற்கொள்வதில்முட்டுக்கட்டை ஏற்படும். மேலும், ஈரானுக்கு பிற நாடுகள் யுரேனியம் செறிவூட்டுதல்தொடர்பான உதவிகளைச் செய்ய முடியாது. அதுதொடர்பான தொழில்நுட்பஉதவிகளையும் பெற முடியாது.

அணு ஆயுத உலைகளுக்குத் தேவைப்படும் எரிபொருள் ஈரானுக்குக் கிடைக்காது.ஏவுகணைகள் தொடர்பான தொழில்நுட்பத்தையும் ஈரான் பெற முடியாது.

மொத்தத்தில் அணு ஆயுத தயாரிப்பு மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பம்உள்ளிட்டவை தொடர்பாக ஈரானுக்கு எந்த நாடும் எந்தவிதமான உதவியையும்வழங்க முடியாது. அதேபோல ஈரானிடமிருந்து யாரும் இந்த உதவிகளைப் பெறவும்கூடாது.

சட்டவிரோத தடை: ஈரான்

இந்த தடை சட்டவிரோதமானது என்று ஈரான் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்துஈரான் நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகம்மது அலிஹூசைனி கூறுகையில், அமைதிப் பாதையில் ஈரானின் அணு சக்தி ஆய்வுகள் நடந்துவருகின்றன். இந்தத் தடையால் அந்தப் பணிகளில் தொய்வு ஏற்படாது.

பாதுகாப்பு கவுன்சிலின் தடை சட்டவிரோதமானது. இதன் மூலம் பாதுகாப்புகவுன்சிலின்மதிப்புக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது என்றார் ஹூசைனி.

அமெரிக்கா வரவேற்பு:

பாதுகாப்பு கவுன்சில் தடை அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்துஅமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் நிக்கோலாலஸ் பர்ன்ஸ் கூறுகையில், இதுவரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. முக்கியமானது. சர்வதேச சமுதாயம் இதை விடகடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஈரானுக்கு வழங்கி வரும் நிதியுதவிகளை நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன்நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகளை வலியுறுத்தப் போகிறோம். ஈரானுடன்அனைத்துத் தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்று இந்த நாடுகளிடம் கோரப்போகிறோம்.

ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 10 முதல் 11 நாடுகள் ஈரானுக்கு பல்வேறு ஏற்றுமதிவாய்ப்புகளை வழங்கியுள்ளன. அதை நிறுத்த நாங்கள் முயற்சிக்கப் போகிறோம்.

இதேபோல ரஷ்யாவும், சீனாவும் ஈரான் விவகாரத்தில் இன்னும் கடுமையாக நடந்துகொள்ளவில்லை. அணு ஆயுதம் தொடர்பான உதவிகளை இந்த நாடுகள் ஈரானுக்குவழங்குவதை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் பர்ன்ஸ்.

தடை பிரச்சினையைத் தீர்க்காது: சீனா

இதற்கிடையே, இந்தத் தடையால் பிரச்சினையை முழுவதுமாக தீர்த்து விட முடியாதுஎன்று சீனா கருத்து தெரிவித்துள்ளது.

ஐ.நா. தடை குறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லியூ ஜினா ஜவோகூறுகையில், இந்த தடை தீர்மானத்தை சீனா ஆதரித்திருந்தாலும், இதன் மூலம் எந்தசுமூக முடிவையும் எட்ட முடியும் என நினைக்கவில்லை.

இந்தத் தடை நிரந்தர தீர்வாக அமைய முடியாது. அனைத்து தரப்பினும்பேச்சுவார்த்தை மூலம் ஈரான் விவகாரத்தை தீர்க்க முயல வேண்டும். தடை உத்தரவால்நிரந்த தீர்வை எட்ட முடியாது என அனைவரும் உணர வேண்டும் என்றார்.

இந்தத் தடை மூலம் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.அதேபோல ஈரானிலிருந்து எண்ணெய் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+