திமுக வலையில் வீழ்ந்த எல்.ஜி.: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:திமுக விரித்த வலையில் சிக்கிக் கொண்ட எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன்ஆகியோருக்காக நான் அனுதாபப்டுகிறேன், பரிதாபப்படுகிறேன் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு நடைப்பயணத்தை வெற்றிகரமாகமுடித்துக் கொண்டு இன்று காலை வைகோ சென்னை திரும்பினார். சென்னை மெரீனாகடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியார்களிடம் அவர் பேசுகையில், மதிமுக நூறு சதவீத வலிமையுடன்,ஒற்றுமையுடன் உள்ளது. யாராலும் இந்த இயக்கத்தை சிதைத்து விட முடியாது,குலைத்து விட முடியாது.

மதிமுகவை உடைத்து விட முடியும், அழித்து விட முடியும் என நினைப்போரின்முயற்சிகள் தோல்வியில் முடியும். இரும்புக் கரம் கொண்டு அந்த முயற்சிகளைமதிமுக தொண்டர்கள் முறியடிப்பார்கள்.

நாளை தாயகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், உயர் மட்டக் குழு, அரசியல்ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மையம் உள்ளிட்ட குழுக்களின் கூட்டம்திட்டமிட்டபடி நடைபெறும்.

கடந்த 13 ஆண்டுகளாக மதிமகவின் வளர்ச்சிக்காக நான் அரும்பாடு பட்டுள்ளேன்.ஆனால் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி மதிமுகவை உடைக்க சதிசெய்கிறார்.

அவர் விரித்த வலையில் இரண்டு பேர் மட்டுமே மாட்டியுள்ளனர். அவர்களுக்காகநான் அனுதாபப்படுகிறேன், பரிதாபப்படுகிறேன்.

கருணாநிதியும், அவரது குடும்ப மீடியாக்களும் கடந்த ஐந்து மாதங்களாக மதிமுகதொண்டர்களை தங்களது தொடர் அவதூறுப் பிரசாரத்தின் மூலம் சித்திரவதை செய்துவருகின்றனர். மதிமுக குறித்த பொய்யான, அவதூறான செய்திகளை ஒளிபரப்பிவருகிறார்கள்.

எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். எனவே அவர்களால் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது.

நாளைய கூட்டத்தில் குண்டர்களை அனுப்பி, மதிமுக கரை வேட்டி கட்ட வைத்துஅவர்கள் மூலம் தாயகத்தில் கலவரத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது.

போலீஸ் உதவியுடன் சென்னை மாநாகராட்சித் தேர்தலில் எப்படி வன்முறைவெறியாட்டத்தை நிகழ்த்தினார்களோ, அதேபோல, சமூக விரோதிகளின் துணையுடன்தாயக்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மதிமுகவினர் என்ற போர்வையில்பெரும் கலவரத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளனர் என்றார் வைகோ.

இதற்கிடையே, அடுத்த மாதம் கூட்டப்படவுள்ள மதிமுக பொதுக்குழுவில், கட்சியின்புதிய அவைத் தலைவராக மூத்த அரசியல் தலைவர் இரா. செழியனை நியமிக்கவைகோ தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின்சகோதரர்தான் இரா. செழியன்.

வைகோவை தீவிரமாக ஆதரித்துப் பேசி வருபவர் செழியன். அவரை மதிமுகவின்அவைத் தலைவராக நியமிக்க வைகோ திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

கட்சியினருடன் தீவிர ஆலோசனை:

சென்னை திரும்பிய வைகோ கட்சி முன்னணியினருடன் தீவிர ஆலோசனைநடத்தினார். நாளைய கூட்டம் குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதற்கிடையே, மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் மதிமுகதொண்டர்கள் குவிந்து வருகின்றனர். எல்.ஜி. தரப்பிலிருந்தோ அல்லது வேறுதரப்பிலிருந்தோ பிரச்சினைகள் எழுந்தால் அவற்றை சமாளிக்க தாங்கள் தாயகத்தில்குவிவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமருக்கு வைகோ கடிதம்:

சென்னையில் நாளை காலை நடைபெறும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் உயர் மட்டக் கூட்டத்தின்போது போலீஸ் துணையுடன் குண்டர்களை ஏவிகலவரத்தை ஏற்படுத்த முதல்வர் கருணாநிதி சதித் திட்டம் தீட்டியுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்குமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் மூலம் புகார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ எழுதியுள்ள அவசரக் கடிதத்தில், தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மதிமுகவின் செயல்பாடுகளைமுடக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோருடன் முதல்வர் கருணாநிதி ரகசிய உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு மதிமுகவுக்கு அவப் பெயரை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டியுள்ளார்.

இந்த நிலையில் கட்சியின் சட்டத் திட்டத்தின்படி பொதுச் செயலாளர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி இருவரையும் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளேன்.இருப்பினும் இருவரும் அடிப்படை உறுப்பினர்களாக தொடர்ந்து நீடிக்க அனுமதித்துள்ளோம்.

இந்த நிலையில் மதிமுகவின் தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் நாளை மாவட்டச் செயலாளர்கள் உயர் மட்டக் கூட்டம் காலை 11 மணிக்குநடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் போலீஸ் துணையுடன் குண்டர்களைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்த கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் மூலம் எனக்குசெய்தி கிடைத்துள்ளது.

மதிமுக தொண்டர்களை கட்சித் தலைமைக் கழக அலுவலகத்திற்கு வர விடாமல், தடுக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மதிமுக தொடங்கப்பட்ட 13 ஆண்டு காலத்தில் இதுவரை எந்த வன்முறையிலும் ஈடுபட்டதில்லை. அமைதி, அறவழியில் மட்டுமே நாங்கள் செயல்பட்டுவருகிறோம்.

தற்போது மதிமுக சந்தித்து வரும் அசாதாரண சூழ்நிலையை பிரதமர் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ. இதேபோலகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் வைகோ ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

ஜனவரியில் பொதுக்குழு:

இதற்கிடையே, பொதுக்குழுக் கூட்டத்தை நாளை கூட்டாமல் அதை ஜனவரி மாதத்திற்கு வைகோ தள்ளி வைத்துள்ளார்.

நாளை நடைபெறும் கூட்டம் சாதாரண முறையில் நடைபெறவுள்ளது. இதில் தனக்குப் பின்னால் கட்சி நிற்கிறது என்பதை வைகோ உறுதிப்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். மேலும், எல்.ஜி., செஞ்சியாரின் செயல்களை கட்சியினர் மத்தியில் விளக்கி, கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளஇந்தக் கூட்டத்தை அவர் பயன்படுத்திக் கொள்ளவுள்ளார்.

கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டமாக நாளைய கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து நிர்வாகிகளுடனும் வைகோ தீவிர ஆலோசனைநடத்தவுள்ளார். தனது நிலை மற்றும் மதிமுகவின் நிலை உள்ளிட்டவற்றை விரிவாக விளக்கவுள்ளார்.

இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன. கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்.ஜி. மற்றும்செஞ்சியாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு 15 நாட்களில் அவர்கள் பதில் தர கோரப்பட்டுள்ளனர்.

விளக்கம் தராவிட்டாலோ அல்லது திருப்தியான பதில் தராவிட்டாலோ இருவரும் கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். ஜனவரி முதல்வாரத்தில் கூடும் பொதுக்குழுக் கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

பெரியாறு அணை போல மதிமுக உறுதியாக உள்ளது

முன்னதாக முல்லை பெரியாறு அணை போல மதிமுகவும் உறுதியாக, வலுவாகஉள்ளது என்று முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு நடைபயணத்தை நேற்றுநிறைவு செய்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு நடைப்பயணத்தை கடந்த 18ம் தேதிமதுரையில் வைகோ தொடங்கினார். ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் புடைசூழ வைகோ மேற்கொண்ட நடைப்பயணம் நேற்று இரவு கூடலூரில் முடிவடைந்தது.

நேற்று காலை கம்பத்திலிருந்து கிளம்பிய வைகோ இரவு எட்டரை மணிக்கு கூடலூரைஅடைந்தார். அங்கு நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் வைகோ பேசினார். அவர்பேசுகையில், நான் மேடையில் இருக்கும்போது அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா தொலைபேசியில் என்னிடம் பேசினார்.

நடைப்பயணம் சிறப்பாக முடிந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். முல்லைப் பெரியாறுஅணை பிரச்சினைக்காக தேவைப்பட்டால் மத்திய அரசை எதிர்த்து மாபெரும்போராட்டத்தை நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்றார் வைகோ.

கூடலூர் பொதுக் கூட்டத்திற்கு மிகப் பெரிய அளவில் தொண்டர்கள் திரண்டிருந்தனர்.இதனால் வழக்கமாக பேசுவதை விட அதிக உற்சாகமாக, உணர்ச்சிகரமாக பேசினார்வைகோ.

முன்னதாக கம்பத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ரத்தத்திலிருந்துசிவப்பு அணுக்களை எப்படிப் பிரிக்க முடியாதோ அதேபோல மதிமுகவையும்உடைக்க முடியாது.

கடந்த 2 மாத காலமாகவே மதிமுகவை உடைக்க திட்டம் தீட்டி வருகின்றனர். இந்தநிலையில் இந்த இருவர் மீதும் நான் வருத்தப்படுகிறேன். அவர்கள் அம்புகள்தான்,எய்தவர் எங்கோ இருக்கிறார்.

இத்தனை நாள் அவர்கள் மதிமுகவில் இருந்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை மாநகராட்சித் தேர்தலின்போது வன்முறை வெறியாட்டத்தைநடத்தியதைப் போல 25ம் தேதி தாயகத்தில் நடைபெறப் போகும் பொதுக் குழுக்கூட்டத்திலும் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

ரத்தமும் கண்ணீரும் சிந்தி இந்த இயக்கத்தை வளர்த்துள்ளோம். கொஞ்சம்கொஞ்சமாக பாடுபட்டு தூக்கணாங்குருவி கூட்டைக் கட்டியுள்ளோம். இந்தக்கூட்டைக் கலைக்க நினைக்காதீர்கள்.

ஈ, எறும்புக்குக் கூட தீங்கு நினைக்காதவர்கள் நாங்கள். எங்களை அழிக்க நினைத்தால்நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.கொடுக்கக் கூடிய விலை அதிகமாக இருக்கும்.

முல்லைப் பெரியாறு அணை போல மதிமுகவும் வலுவாக, உறுதியாக இருக்கிறதுஎன்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+