அத்வானி பிரதமராக வாஜ்பாய் ஆதரவு
லக்னோ:அத்வானி பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாக இருந்தால் எனது ஆதரவு இருக்கும்என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
பாஜகவில் அடுத்த பிரதமர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பதில் பெரும் போட்டிகாணப்படுகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நான் இன்னும் பிரதமர் பதவியைவகிக்க தயாராகவே இருக்கிறேன் என்று முன்பு கூறினார்.
ஆனால், பிரதமர் பதவிக்குப் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக அத்வானி கூறவேசர்ச்சை கிளம்பியது. இவர்கள் இருவரைத் தவிர மேலும் சிலரும் பிரதமர் பதவிக்குப்போட்டியிட ஆசையாக இருப்பதாக கருத்து கூற ஆரம்பிக்கவே இந்த சர்ச்சைபெரிதானது.
இந்த நிலையில் அத்வானிக்கு, வாஜ்பாய் தனது ஆதரவைத் தெரிவித்து கருத்துவெளியிட்டுள்ளார்.
லக்னோவில் நடந்து வரும் பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டவாஜ்பாய் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் வேட்பாளராகஅத்வானி அறிவிக்கப்பட்டால் அவருக்கு எனது பூரண ஆதரவு இருக்கும்.
நான் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவேனா என்பது குறித்து கூற முடியாது என்றார்வாஜ்பாய். அத்வானி பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் அவரை ஆதரிப்பேன்என்று கூறியுள்ளதன் மூலம் இந்த சர்ச்சைக்கு வாஜ்பாய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முன்னதாக தேசிய கவுன்சில் கூட்டத்தில் துப்பாக்கி சுடும் வீரர் ஜஸ்பால் ராணாவுக்குபாராட்டு தெரிவிக்கப்பட்டது. தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் 3தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். அதற்கு பாஜக கூட்டத்தில் பாராட்டு தெரிவித்துகெளரவிக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ராணாவைப் பாராட்டிப் பேசுகையில், தனக்கும்,நாட்டுக்கும் மிகப் பெரிய புகழைத் தேடித் தந்துள்ளார் ராணா என்றார்.
ராணாவின் சகோதரி சுஷ்மா சிங்கின் மாமனார்தான் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் சுஷ்மா சிங்கும் கலந்து கொண்டார்.
பாராட்டுக்குப் பின்னர் ராணா செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் வாஜ்பாயின்கொள்கைகளுக்கு விசிறி. கடந்த 1997ம் ஆண்டு முதலே நான் பாஜகவுடன்நெருங்கிய தொடர்பு வைத்துள்ளேன். பாஜகவின் பல்வேறு கொள்கைகளில் எனக்குஉடன்பாடு உண்டு என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications