எல்.ஜி. நீக்கத்திற்கு உயர்நீதிமன்றம் தடை-வைகோவுக்கு பெரும் சிக்கல்
சென்னை:மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர்நீக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
வைகோவுக்கு எதிராக எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் போர்க்கொடி உயர்த்திய நிலையில், தேனிமாவட்டம் கம்பத்தில், மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் எல்.கணேசன், செஞ்சிராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கி தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து இருவரும் கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதாகவும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில்தொடர்ந்து நீடிப்பதாகவும் வைகோ அறிவித்தார்.
மேலும் 25ம் தேதி சென்னை மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் மதிமுக உயர் நிலைக் குழுகூடி ஆலோசனை நடத்தும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தங்களது பதவிகளைப் பறித்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி எல்.கணேசனும், செஞ்சிராமச்சந்திரனும் வழக்குத் தொடரப் போவதாக அறிவித்தனர். அதன்படி இருவரின் சார்பிலும் வழக்கறிஞர்வினாயக விஷ்ணு, தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை அணுகி, அவசர வழக்கு தொடரவுள்ளதாகவும், அதற்குஅனுமதி தர வேண்டும் என்றும் கோரினார். இதை தலைமை நீதிபதி ஷா அனுமதித்தார்.
நீதிபதி ஜோதிமணி வழக்கை விசாரிப்பார் எனவும் அவர் அறிவித்தார். இதையடுத்து நீதிபதி ஜோதிமணியின்வீட்டில் சைதாப்பேட்டை பகுதி மதிமுக செயலாளர் சைதை சம்பத் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மதிமுக சட்ட விதிப்படி அவைத் தலைவராக இருப்பவர்தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டமுடியும். ஆனால், கம்பத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அதற்கு பொருளாளர் கண்ணப்பன்தலைமை தாங்கியிருக்கிறார்.
அவைத் தலைவர் இருக்கும்போது பொருளாளர் கூட்டத்தைக் கூட்டியது சட்டவிரோதமாகும். பதவி நீக்கம்செய்யும் அதிகாரமும் பொதுக்குழுவுக்கு மட்டும்தான் உள்ளது.
விளக்க நோட்டீஸ் அனுப்பிய பிறகே பதவியிலிருந்து நீக்க முடியும். எனவே மாவட்டச் செயலாளர்கள்கூட்டத்தில் இவர்கள் இருவரையும் நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும். தாயகத்தில் நடைபெறுவதாகஅறிவிக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அரசுத் தலைமை வழக்கறிஞருமான கே.வி.வேங்கடபதிஆஜராகி வாதாடினார். அவரது வாதத்தைக் கேட்ட நீதிபதி ஜோதிமணி, எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன்ஆகியோரை பதவி நீக்கம் செய்ததற்கு இடைக்காலத் தடை விதித்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி வைகோ, கண்ணப்பன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஜனவரி 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இருப்பினும் இன்று தாயகத்தில் நடைபெறும் உயர் நிலைக் குழுக் கூட்டத்திற்கு தடை ஏதும்பிறப்பிக்கப்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications