நான் தான் கருப்பு எம்ஜிஆர்- விஜய்காந்த்
சென்னை:எனக்கு எம்.ஜி.ஆரின் ஆசி நிறைய உள்ளது என நடிகர் விஜய்காந்த் கூறினார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பெரியார்மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக,விடுதலைச் சிறுத்தைகள், மூவேந்தர் மக்கள் முன்னணி, ஜனநாயக முன்னேற்ற கழகம்ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 2,000 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி தேமுதிகவில்இணைந்தனர்.
நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில்,
நான் எம்.ஜி.ஆரை எனது குருவாக ஏற்று கொண்டிருக்கிறேன். அதனால் அவரதுசீடனாகிய என்னை மக்கள் கறுப்பு எம்ஜிஆர் என்று அழைக்கின்றனர். அவரது ஆசிஎனக்கு நிறைய உள்ளதால் தான் அவரது சிலை மட்டுமின்றி அவர் பயன்படுத்தியபிரசார வாகனம், "கோட் மற்றும் "டை ஆகியவையும் எனக்கு கிடைத்தன.
எம்ஜிஆரை போல நான் கட்சி ஆரம்பித்தது மக்களுக்காக தான். நான் அரசியலைவைத்து பிழைக்க வரவில்லை. மக்களுக்காக உழைக்கத் தான் வந்திருக்கிறேன்.எம்ஜிஆர் மக்களையே தனது வாரிசாக நினைத்தார். எனக்கு இரு பிள்ளைகள்இருந்தாலும் நானும் மக்களையும், அவர்களது குழந்தைகளையும் தான் வாரிசாகநினைக்கிறேன்.
தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளிக்கும் கட்சிகள் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகுவாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஐந்தாண்டுகளை கடத்துகின்றனர்.
முல்லை பெரியாறு அணை பிரச்னையானாலும், காவிரி பிரச்னை ஆனாலும் காலத்தைகடத்துவதே அரசின் நடவடிக்கையாக உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும்முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தீர்வு கிடைக்காதது தமிழக மக்களுக்குஇழைக்கப்பட்ட உச்சக்கட்ட கொடுமை.
எதற்கெடுத்தாலும் ஜெயலலிதா பேசிக்கொண்டே இருக்கிறார் என்று முதல்வர்கருணாநிதி சொல்கிறார். ஜெயலலிதா ஆட்சி செய்த போது அவரும் அதை தானேசெய்தார்.
தேர்தல் நேரத்தில் கூட்டணி வைக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர். நான்அவர்களிடம் கட்சி மீது நம்பிக்கை வையுங்கள், கூட்டணி மீது நம்பிக்கைவைக்காதீர்கள் என்று கூறினேன். இன்றைக்கு தேமுதிக சாதித்து காட்டியிருக்கிறது.
நான் என் கட்சி தொண்டர்களை வேறு கட்சி தொண்டர்களோடு பேசக் கூடாது என்றுசொல்வதில்லை. அவ்வாறு பேசுபவர்களை மற்றவர்கள் போல் கட்சியை விட்டுநீக்குவதில்லை. மாறாக அவர்களுடன் நெருங்கி பழகுங்கள் என்று அறிவுறுத்துவேன்என்றார்.
கெளரவ ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும்:
இதற்கிடையே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் முழுவதும் உள்ள 67 அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள 1500க்கும் மேற்பட்ட விரிவுரையாளர் பணியிடங்களில் ஆசிரியர்களைநிரந்தரமாக நியமிக்கப்படாத காரணத்தினால் மணி நேர கூலி அடிப்படையில் மணிக்கு ரூ. 100 வீதம் மாதத்திற்கு 40 மணி நேரம் என்றுஅரசுக்கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.
கடந்த கல்வி ஆண்டில் முடிவில் உயர்நீதிமன்றம் இனிமேல் கெளரவ விரிவுரையாளர் முறையே கூடாது என்று தீர்ப்பளித்து தமிழக அரசுக்கு நிரந்தரநியமனத்துக்கு அறிவுறுத்தியது. தமிழக அரசும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
அப்படி நிரந்தர ஆசிரியர் நியமனத்தின் போது அரசு கலைக்கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளராக வேலை பார்ப்பவர்களில் தகுதி உடையோருக்குமுன்னுரிமை கொடுத்தும், குறைந்தபட்ட தகுதியுயோருக்கு (முதுநிலை 55 சதவீதம்) கூடுதல் தகுதியான எம்பில் முடிப்பதற்கு குறுகிய கால அவகாசம்கொடுத்தும், அரசு அவர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்.
பள்ளிகளிலும் ஏனைய துறைகளிலும் தமிழக அரசு தற்காலிக ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிரந்தரப்பணியில் அமர்த்தியதைப் போல கெளரவவிரிவுரையாளர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து நிரந்தரப்பணியில் அமர்த்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications