ஜெயகாந்தன், மனோரமாவுக்கு கலைஞர் விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:முரசொலி அறக்கட்டளை சார்பில் எழுத்தாளர் ஜெயகாந்தன், சிலம்பொலிசெல்லப்பன், நடிகை மனோரமா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான கலைஞர் விருதுவழங்கப்படுகிறது.
அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ், இலக்கியம், கலை ஆகியதுறைகளில் சிறப்பான சேவை புரிந்தோருக்காக முரசொலி அறக்கட்டளை சார்பில்ஆண்டுதோறும் கலைஞர் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது பெற எழுத்தாளர் ஜெயகாந்தன், தமிழறிஞர் சிலம்பொலிசெல்லப்பன், நடிகை மனோரமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரூ. 1 லட்சம்பரிசும் பட்டயமும் இந்த விருதில் அடங்கும்.
ஜனவரி 23ம் தேதி சென்னையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி விருதுகளைவழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications