அத்வானி பிரதமரானால் நாடு நாசமாகும்-லாலு
வாரணாசி:அத்வானியால் பிரதமர் ஆகவே முடியாது. ஒருவேளை தப்பித் தவறி அவர் பிரதமர் பதவிக்கு வந்து விட்டால்நாடு நாசமாய் போய் விடும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
வாரணாசியில் செய்தியாளர்களிடம் லாலு பேசுகையில், அத்வானியால் ஒருபோதும் பிரதமர் பதவிக்கு வரவேமுடியாது. ஒருவேளை அவர் பிரதமர் பதவிக்கு வந்து விட்டால் இந்த நாடு நாசமாகப் போவதை யாராலும்தடுக்க முடியாது.
பாஜகவின் மிதவாத முகம் வாஜ்பாய். அடிப்படைவாதிகளின் முகம் அத்வானி. மதச்சார்பற்ற நாடானஇந்தியாவுக்கு அத்வானி போன்றவர்கள் பிரதமராகக் கூடாது.
இந்துத்துவா, அயோத்திப் பிரச்சினை ஆகியவற்றை மீண்டும் பாஜக கையில் எடுத்துள்ளது கண்டனத்துக்குரியது.உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் வருவதால் அரசியல் ஆதாயத்துக்காக மீண்டும் ராமர் கோவிலை கையில்எடுத்துள்ளனர். ஆனால் மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள்.
ஒரே ஒரு தடவை சமைக்கக் கூடிய பாத்திரம் போலத்தான் பாஜக. எனவே என்னதான் இந்துத்துவா, அயோத்திப்பிரச்சினையை மீண்டும் கிளப்பினாலும், மீண்டும் ஒருமுறை அந்தக் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது.
வரும் உ.பி. சட்டசபைத் தேர்தலில் முலாயம் சிங் யாதவ் ஆட்சியை மிகக் கேவலமாக தோற்கடித்து உ.பி. மக்கள்பாடம் கற்பிக்க வேண்டும்.
ராகுலை முதல்வராக்கலாம்:
ராகுல் காந்தி உ.பி. மாநில அரசியலில் தீவிர ஆர்வம் காட்டுகிறார். கடுமையாக உழைக்கிறார். எனவே உ.பி.சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்கவேண்டும். அரசியல் ரீதியாக ராகுல்காந்தி முதிர்ச்சி அடைந்து விட்டார்.
கிழக்கு உ.பியில் பல தொகுதிகளில் எங்களது ராஷ்டிரிய ஜனதாதளம் போட்டியிடும். பிற பகுதிகளில் காங்கிரஸ்கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் என்றார் லாலு.
அத்வானி பிரதமரா?: சான்ஸே இல்லை-நிதிஷ்
இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாஜ்பாய் தான் பிரதமராவார் என பீகார்முதல்வரும் கூட்டணியின் முக்கிய தலைவருமான நிதிஷ் குமார் கூறியுள்ளார். இதன் மூலம் நாடாளுமன்றத்தேர்தலின்போது தன்னை பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தும் அத்வானியின் திட்டத்துக்கு முதல் பெரிய அடிவிழுந்துள்ளது.
பாஜக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி ஐக்கிய ஜனதா தளம். இக் கூட்டணி தான் பிகாரில் ஆட்சி நடத்திவருகிறது. இந் நிலையில் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தே.ஜ.கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து சமீபகாலமாக பெரும் சர்ச்சை நிலவுகிறது.கூட்டணியின் ஈடு இணையற்ற தலைவர் வாஜ்பாய் தான்.
இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாஜ்பாய் தான் பிரதமர் ஆவார். எனவே தற்போது அந்த இடம்காலியாக இல்லை. காலியிடம் ஏற்பட்டால், அதுகுறித்து சிந்திப்போம் என்றார்.
இதன் மூலம் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் திட்டத்தில் இருக்கும் அத்வானிக்கு தனது மறைமுக எதிர்ப்பைநிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications