குமரி முதல்...: தமிழ் சுடரொளி ஓட்டம்/ஞ>

Subscribe to Oneindia Tamil

சென்னை:மத்தியில் ஆட்சி மொழியாக தமிழை மத்திய அரசு அறிவிக்கக் கோரி கன்னியாகுமரி முதல் சென்னை வரைதமிழ்ச் சுடரொளி ஓட்டம் பிப்ரவரி 2ம் தேதி தொடங்குகிறது.

தமிழ், தமிழர் மேம்பாட்டு இயக்கம், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் ஆகியவை இணைந்து இந்த சுடரொளிஓட்டத்தை மேற்கொள்ளவுள்ளன. மன்ற உலக அமைப்பாளர் வா.மு.சேதுராமன் தலைமையில் தமிழ் இன, தமிழ்உணர்வுகளுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், 1993ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தமிழ் ஊர்திப்பயணம் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு நாட்டின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். திருக்குறளை இந்தியாவின் தேசியநூலாக அறிவிக்க வேண்டும். கண்ணகியின் மங்களதேவி நினைவிடத்தில் கண்ணகி கோட்டம் அமைக்கவேண்டும்,

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு மனித நேயத்தோடு தீர்வு காண வேண்டும், கோவில்களில் தமிழில் வழிபாடுநடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த சுடரொளி ஓட்டம் நடைபெறவுள்ளது.

பிப்ரவ> 2ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கும் இந்த ஓட்டத்திற்கு சேதுராமன் தலைமைதாங்குகிறார். வள்ளியூர், நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை,புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், புதுச்சேரி, திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம்வழியாக 27ம் தேதி சென்னையில் ஓட்டம் முடிகிறது.

ஓட்ட முடிவில் முதல்வர் கருணாநிதியிடம் சுடரொளி வழங்கப்படவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+