முல்லை பெரியாறு-கருணாநிதியுடன் காரத் சந்திப்பு
சென்னை:முதல்வர் கருணாநிதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரட் இன்றுசந்தித்துப் பேசினார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்து இடதுசாரி முதல்வர் அச்சுதானந்தன் நடந்து கொள்ளும்முறை குறித்து அப்போது கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
காரத்தும் கேரளத்தைச் சேர்ந்தவர் தான் என்றாலும் அச்சுதானந்தன் போலில்லாமல் தேசிய பார்வை கொண்டவர்என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலபுரத்தில் இன்று காலை கருணாநிதியை அவரது இல்லத்தில் காரத் சந்தித்துப் பேசியபோது பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் உடனிருந்தார்.
அரை மணி நேரம் நடந்த இச் சந்திப்பின்போது கேரளத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார் கருணாநிதி.இதையடுத்து தேசிய அளவிலான பிற பிரச்சனைகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய காரத், இரு மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு இருஅரசுகளும் இந்தப் பிரச்சனையை சுமூகமாகத் தீர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழகத்தின் கவலைகளையும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உணர்ந்தே உள்ளது.
அடுத்து கேரள தலைவர்களையும் சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசவுள்ளேன். அணை பிரச்சனையில்மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டாம் என்று கருணாநிதியிடம் நான் ஏதும் கூறவில்லை. அந்தப் பேச்சும்எழவில்லை.
அதே போல தேசிய நதிகளை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கவில்லை. தொழில்நுட்பரீதியாக ஆற்று நீரைமுறையாக பகிர்ந்து கொள்வது குறித்து யோசிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
இலங்கை விவகாரம் குறித்து கருணாநிதியிடம் பேசினேன். அங்கு தமிழர்கள் படும் துயரங்கள் குறித்துவிவாதித்தோம்.
பென்சன் குறித்து நாடாளுமன்றத்தில் தாக்கலாகவுள்ள சட்ட திருத்த மசோதா குறித்தும் கருணாநிதியுடன்பேசினேன். இந்த சட்டத் திருத்தம் எங்களுக்கு உடன்பாடானதாக இல்லை. இதனால் மத்திய, மாநில அரசுஊழியர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்றார்.
இச் சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் மத்தியக் கமிட்டி உறுப்பினர் ரங்கராஜனும் உடனிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications