புலிகள் மீது ஜோர்டான் கப்பல் ஊழியர்கள் புகார்
கொழும்பு:தரை தட்டிய கப்பலிலிருந்து தங்களைக் கட்டாயப்படுத்தி இறங்கச் செய்து விடுதலைப்புலிகள் அழைத்துச் சென்றதாக ஜோர்டான் நாட்டுக் கப்பல் கேப்டன் மற்றும்ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு இந்தியாவின் காக்கிநாடாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவின்டர்பன் நகருக்கு 14,000 டன் அ>சியை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஜோர்டான்நாட்டுக் கப்பல், இலங்கையின் முல்லைத் தீவு அருகே தொழில்நுட்பக் கோளாறுகாரணமாக தரை தட்டியது.
இதையடுத்து அந்தக் கப்பல் கேப்டன் மற்றும் ஊழியர்களை மீட்ட விடுதலைப்புலிகள் அவர்களை தங்களது பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களைசர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து அனைவரும் கொழும்பு வந்தடைந்தனர். அங்கு இன்றுசெய்தியாளர்களிடம் கப்பல் கேப்டன் ரமாஸ் அப்துல் ஜப்பார் பேசுகையில்,
டிசம்பர் 23ம் தேதியன்று நள்ளிரவுக்கு மேல், என்ஜின் கோளாறு காரணமாக முல்லைத்தீவுக்கு அருகே கப்பல் தரைதட்டி நின்றது.
இந்த நிலையில் அங்கு ஆறு படகுகளில் விடுதலைப் புலிகள் வந்தனர். எங்களதுகப்பலுக்கு அருகே வந்த அவர்கள், கப்பலின் நங்கூரத்தை துண்டித்து விட்டு தங்களதுபடகுகளில் ஏறிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினர்.
விரைவில் தங்களது படகுகளில் ஏறிக் கொள்ளாவிட்டால், கப்பலை குண்டு வைத்துத்தகர்த்து விடுவோம் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர். நங்கூரத்தை வேகமாகதுண்டிக்கச் சொல்லி ஆறு முறை வானில் துப்பாக்கியாலும் சுட்டனர்.
விரைவில் நாங்கள் கப்பலிலிருந்து வெளியேறா விட்டால் இலங்கை விமானப்படைவந்து தாக்குதல் நடத்தும் என்றும் எச்சரித்தனர். ஒரு விடுதலைப் புலி வீரர் கப்பலில்ஏறி குண்டுகளையும் பொருத்தத் தொடங்கினார்.
மேலும், கப்பலில் இருந்த பேக்ஸ், கம்ப்யூட்டர், ரேடார் மற்றும் முக்கிய தகவல்தொடர்பு சாதனங்களையும் அவர்கள் துண்டித்து எடுத்துச் சென்று விட்டனர்.இதையடுத்து வேறு வழியில்லாமல் நாங்கள் அவர்களது படகுகளில் ஏறிக்கொண்டோம்.
எங்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றாலும் கூட விடுதலைப் புலிகள்எங்களை நன்றாக கவனித்துக் கொண்டனர். நல்ல உணவு, ஆடைகள் கொடுத்தனர்,தங்கவும் நல்ல இடம் கொடுத்தனர் என்றார் ஜப்பார்.
கப்பலின் கேப்டன் ஈரானைச் சேர்ந்தவர். ஊழியர்களில் 13 பேர் ஜோர்டானைச்சேர்ந்தவர்கள். மற்றவர்கள் எகிப்து நாட்டவர்கள்.
இதற்கிடையே, தரை தட்டி நின்று விட்ட கப்பல் மற்றும் அதில் உள்ள அரிசியைபத்திரமாக மீட்பது குறித்து இலங்கை அரசுடன் கப்பல் நிறுவனமான சலீம்இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட் மற்றும் டிரேடிங் கம்பெனி ஆலோசனைமேற்கொண்டுள்ளது.
இந்தக் கப்பலின் மதிப்பு 10 முதல் 12 மில்லியன் ஆகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications