பெரியாறு: எம்ஜிஆர் மீது பழி போடும் கேரளாகொலை: 2 அமைச்சர்கள் பதவி விலகல்
திருவனந்தபுரம்:எம்.ஜி.ஆர்தான் 136 அடிக்கு மேல் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத்தேக்க மாட்டோம் என உறுதியளித்ததாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் புதுக்குழப்பத்தை கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அச்சுதானந்தன் பேசுகையில்,முல்லைப் பெரியாறு அணையின் நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தவேண்டும் என தமிழக அரசுக்கும், கேரள அரசுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதன் பின்னர் 1970ம் ஆண்டு அணை நீ>லிருந்து மின்சாரம் தயாரிக்க தமிழக அரசுகோரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து ஒப்பந்தம் அதற்கேற்பதிருத்தியமைக்கப்பட்டது.
மின்சாரம் தயாரித்து அதன் மூலம் தமிழக அரசு கூடுதல் லாபம் சம்பாதித்தது. ஆனால்கேரளா அணையிலிருந்து ஒரு சொட்டு நீரைக் கூட எடுக்கவில்லை.
கடந்த 1979ம் ஆண்டு மத்திய நீர் வள ஆணையம் முல்லைப் பெ>யாறு அணையைப்பார்வையிட்டு நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து உயர்த்த வேண்டாம் எனவும், தமிழகஅரசு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும்கூறியது.
ஆனால் தமிழக அரசு அணையை முறையாக பராமரிக்கவில்லை. இதன்காரணமாகவே தற்போது அணையிலிருந்து நீர் கசிகிறது.
1979ம் ஆண்டு கேரள ஜனதாக் கட்சித் தலைவராக இருந்த சந்திரசேகரன்அப்போதைய பிரதமர் சரண் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், முல்லைப் பெ>யாறுஅணை ஆபத்தான நிலையில் இருப்பதை சுட்டிக் காட்டியிருந்தார்.
இதையடுத்து 10.11.1979ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர்எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு சரண்சிங் ஒரு கடிதம் எழுதினார். அதில் 140 அடிக்கு மேல்நீர்மட்டத்தை உயர்த்த வேண்டாம். அணையைப் பராமரித்த பின்னர் உயரத்தைஅதிகரிக்கலாம் என கூறியிருந்தார்.
நவம்பர் 28ம் தேதி இந்தக் கடிதத்திற்கு எம்.ஜி.ஆர். எழுதிய பதில் கடிதத்தில்,அணையை பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்கிறோம். அதுவரை 136 அடிக்குமேல் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மாட்டோம் எனவும் கூறியிருந்தார்.
இந்த உறுதிமொழியை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு நடந்து கொள்கிறது.வைகோ, ஜெயலலிதா ஆகியோரின் சந்தர்ப்பவாத அரசியல் காரணமாக தமிழகமுதல்வர் கருணாநிதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது எம்.ஜி.ஆர். எழுதிய கடிதத்தை நாங்கள்உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்றார் அச்சுதானந்தன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications