நைஜீரிய பெட்ரோல் குழாயில் தீ-700 பேர் பலி
லாகோஸ்:நைஜீரியாவின் லாகோஸ் நகரில் பெட்ரோலிய திருடர்களால் துண்டிக்கப்பட்டஎண்ணைக் குழாயில் தீவிபத்து ஏற்பட்டு, குழாய் வெடித்து 700 பேர் உயிருடன் கருகிஇறந்தனர்.
உலகிலேயே எண்ணை உற்பத்தி செய்யும் எட்டாவது பெரிய நாடு நைஜீரியா என்பதுகுறிப்பிடத்தக்கது. ராட்சத குழாய்கள் மூலம் பெட்ரோலியப் பொருட்களை அந்நாடுபல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.
ஆனால் இந்த ராட்சத எண்ணைக் குழாய்களை உடைத்து பெட்ரோல், டீசல் உள்ளிட்டஎரிபொருட்களை திருடும் செயலில் பல்வேறு கும்பல்கள் ஈடுபட்டுள்ளன. அடிக்கடிஎண்ணைக் குழாய்களை உடைப்பதும், அதில் தீவிபத்து ஏற்பட்டு பலர் உயிரிழப்பதும்நைஜீரியாவில் அதிகரித்து வருகிறது.
லாகோஸ் அருகே உள்ள அபுலே எக்பா என்ற இடத்தில் பெட்ரோல் குழாய் ஒன்றைஉடைத்த சில எண்ணைத் திருடர்கள், அதிலிருந்த பெட்ரோலியப் பொருட்களைடேங்கர் லாரிகள் மூலம் திருடிச் சென்றனர்.
போகும்போது அந்த எண்ணைக் குழாயை அடைக்காமல் அப்படியே விட்டு விட்டுச்சென்றனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வீட்டிலிருந்த வாளி, அண்டா,குண்டாக்களை எடுத்து வந்து சாலையில் வடிந்து கொண்டிருந்த எரிபொருளைநிரப்பினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டு எண்ணைக் குழாய்கள் பயங்கரசப்தத்துடன் வெடித்துச் சிதறின. அதில் எண்ணையைப் பிடித்துக் கொண்டிருந்தஅப்பாவி மக்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
குறைந்தது 500 பேராவது இதில் இறந்திருக்கக் கூடும் நைஜீரிய செஞ்சிலுவைச் சங்கபொதுச் செயலாளர் அபியோதின் ஒரேபியி தெரிவித்தார்.
சாவு எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றபோதிலும் குறைந்தது 700 பேர் இறந்திருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. 60 பேர்பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்டனர்.
நூற்றுக்கணக்கானோரின் கருகிய உடல்கள் அப்பகுதியில் சிதறிக் கிடக்கின்றன. பலஉடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போய் விட்டன.
கடந்த மே மாத.ம் லாகோஸில் இதேபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டு 200 பேர்உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications