பாலக்காட்டில் நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கின
பாலக்காடு:கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று காலைலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நடந்த சுனாமி பேரலைத் தாக்குதலின் 2வதுஆண்டு நினைவு தினம் நேற்று ஆசிய நாடுகளில் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை பாலக்காடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் லேசானநிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் அளவு 3.6 ரிக்டராக இருந்தது. நிலநடுக்கம் காரணமாககட்டடங்கள், வீடுகள் லேசாக குலுங்கின. வீடுகளில் இருந்த பொருட்களும் கீழேவிழுந்தன. இதனால் பாலக்காடு பகுதியில் பெரும் பீதி நிலவியது.
தைவானில் பயங்கர பூகம்பம்:
இந் நிலையில் தைவான் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த இரு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதால் சுனாமி அலைகள் எழக் கூடும் என்ற பீதிஏற்பட்டது. ஆனால் சுனாமி ஏதும் ஏற்படவில்லை.
தைவான் நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில் தைவான் கடலில் ஏற்பட்ட 2 சக்தி வாய்ந்த பூகம்பங்களால் சுனாமி பீதி ஏற்பட்டது.
மாலை 5.56 மணிக்கு முதல் பூகம்பம் ஹெங்சுன் மாகாணத்திலிருந்து 22.8 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கடியில் நிகழ்ந்தது. இது அமெரிக்க புவியியல்மையத்தில் 7.1 ரிக்டராக பதிவாகியது. தைவான் மையத்தில் 6.7 ரிக்டராக பதிவாகியுள்ளது.
அடுத்த சில நிமிடங்களில் 2வது பூகம்பம் ஏற்பட்டது. இது அமெரிக்க மையத்தில் 7 ரிக்டராகவும், தைவான் மையத்தில், 6.4 ரிக்டராகவும்பதிவாகியுள்ளது. 2வது பூகம்பம் கஹோசியாங் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
இந்த பூகம்பம் ஹாங்காங், தெற்கு சீன நகரங்களில் உணரப்பட்டது. ஹாங்காங் நக>ல் பல்வேறு கட்டடங்களும் கடுமையாக அதிர்ந்தன. ஜன்னல்கண்ணாடிகள் உடைந்தன.
ஹெங்சுன் பகுதியில் 6 பேர் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியாயினர். இதுதவிர உயிர்ச் சேதம் குறித்த தகவல் இல்லை. பல இடங்களில் கட்டடங்கள்உடைந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
அடுத்தடுத்து பூகம்பம் ஏற்பட்டதால் 3.3 அடி உயரத்திலான சுனாமி அலைகள் எழக் கூடும். பிலிப்பைன்ஸை அது தாக்கக் கூடும் என ஜப்பான் புவியியல்மையம் எச்சரித்தது. ஆனால் சுனாமி அலைகள் ஏற்படவில்லை என்று பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து சுனாமி தாக்குதல் எச்சரிக்கை அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.
இன்டர்நெட் சேவை பாதிப்பு:
கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த மாபெரும் நிலநடுக்கத்தால் கடலடி தொலைத் தொடர்பு கேபிள்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் தென் கிழக்குஆசியாவில் சர்வதேச தொலைத் தொடர்புகளும் இன்டர்நெட் சேவையும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
இதனால் தென்கொரியா, ஜப்பான் ஆகியவை தான் கடுமையாக பாதிக்கப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications