சதாமுக்கு தூக்கு-தடுக்க உலக நாடுகள் தீவிரம்
பாக்தாத்:இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் உள்ளிட்ட 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை மேல் முறையீட்டு டிரிப்யூனல் உறுதி செய்துள்ளது. இதையடுத்து 30நாட்களுக்குள் சதாம் தூக்கிலிடப்பட வேண்டும்.
ஆனால், இந்த தண்டனை நிறைவேற்றப்படுவது சந்தேகமே.
ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் துஜைல் நகரில் கடந்த 1982ம் ஆண்டு 148ஷியா முஸ்லீம்களை படுகொலை செய்த வழக்கில் சதாம் உசேன், அவரது சகோதரர்பர்ஸான் அல் திக்ரிதி, முன்னாள் நீதிபதி அவாத் அல் பாந்தர் ஆகியோருக்கு கடந்தநவம்பர் 5ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.
இந்தத் தீர்ப்பு மேல் முறையீட்டுக்காக அப்பீல் கோர்ட்டுக்கு சென்றது. அந்த அப்பீலைவிசாரித்த டிரிப்யூனல் தற்போது சதாம் உள்ளிட்ட 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து டிரிப்யூனல் தலைவரான ஆரிப் அப்துல் ரஸ்ஸாக் அல் ஷாஹின்செய்தியாளர்களிடம் பேசுகையில், சதாம் உசேன், அவரது சகோதரர் பர்ஸான் அல்திக்ரிதி, முன்னாள் நீதிபதி அவாத் அல் பாந்தர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் 30 நாட்களுக்குள் தூக்கிலிடப்பட வேண்டும். இதேபோலமுன்னாள் துணை அதிபர் தாஹா யாசின் ரமதானுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைதூக்குத் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இவரும் சாகும் வரை தூக்கிலிடப்படவேண்டும்.
எங்களது வேலை முடிந்து விட்டது. சட்டப்படி 30 நாட்களுக்குள் தூக்கிலிடப்படவேண்டும். அதை நிறைவேற்ற வேண்டியது ஆட்சியாளர்களின் கையில் உள்ளதுஎன்றார் ஷாஹின்.
இதற்கிடையே, சதாம் உசேன் தொடர்பான வழக்கு முறைப்படிவிசாரிக்கப்படவில்லை. எனவே சதாமைத் தூக்கிலிடுவதை இராக் அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆர்வலர்கள் இராக் அரசுக்குகோரிக்கை விடுத்துள்ளனர்.
சதாம் மீது இந்த வழக்கு தவிர குர்து இன மக்கள் வசிக்கும் நூற்றுக்கணக்கானகிராமங்களை அழித்து, அங்கு வசித்த வந்த 1 லட்சத்து 80 ஆயிரம் குர்து இனமக்களை சதாம் தனது ராணுவம் மூலம் அழித்ததாக இன்னொரு வழக்கும்நிலுவையில் உள்ளது.
ஆனால் துஜைல் வழக்கில் சதாம் தூக்கிலிடப்படுவது உறுதியாகி விட்டதால் குர்துஇனப் படுகொலை வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.அதேசமயம் மற்ற 6 பேர் மீதும் வழக்கு தொடர்ந்து நடைபெறும்.
அப்பீல் கோர்ட் உத்தரவை ஈராக் அதிபர் ஜலால் தலபானி மற்றும் 2 துணைஅதிபர்களும் அங்கீகரித்து கையெழுத்திட வேண்டும். அதன் பின்னர் தான் தூக்குதண்டனையை நிறைவேற்ற முடியும்.
சதாம் தப்புவார்?:
ஆனால், சதாமை தூக்கிலிட்டால் இராக்கில் உள்நாட்டுப் போர் வெடிப்பதை தவிர்க்கமுடியாது என அரபு நாடுகள் கருதுகின்றன. மேலும் இதன் தாக்கம் பிற அரபுநாடுகளிலும் எதிரொலிக்கும் என்பதால் சதாமை தூக்கிலிட அந்த நாடுகள்அனுமதிக்காது என்று தெரிகிறது.
சதாமுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் அந்த பிராந்தியத்தில் இரானின்செல்வாக்கு அதிகரிக்கும் என செளதி அஞ்சுகிறது. ஷியாக்கள் இராக்கையும்ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியையும் கட்டுப்படுத்தும் சூழல் உருவாகும் என்பதால்அதைத் தவிர்க்க செளதி விரும்புகிறது. அதே போல எகிப்து அதிபர் ஹோஸ்னிமுபாரக், சிரியா, ஜோர்டன் ஆகிய நாடுகளும் சதாமுக்கு மரண தண்டனை அளிப்பதைஏற்க மறுக்கும் எனத் தெரிகிறது.
வளைகுடாவில் உள்ள தனது ஆதரவு நாடுகளான செளதியையும் எகிப்தையும் மீறிஅமெரிக்கா தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது என்றே தெரிகிறது.
தூக்கு-இந்தியா எதிர்ப்பு:
சதாம் உசேனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டாலும் கூடஅவர் தூக்கிலிடப்பட மாட்டார், உயிர் தப்புவார் என இந்தியா நம்பிக்கைதெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவு செயலகம் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முயற்சிக்கக் கூடாது. சதாம் தூக்கிலிடப்பட்டால்இராக்கில் அமைதி திரும்புவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய் விடும். அப்பீல்கோர்ட் சதாம் தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளதாக அறிகிறோம். இருந்தாலும்அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று இந்தியா நம்புகிறது.
அமைதி திரும்புவதற்கு பாதகமாக உள்ள விஷயங்களை இராக் நிர்வாகம்மேற்கொள்ளாது என்று நம்புகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications