செக்ஸ், சிடி,கொலை-கலங்கும் உபி அரசியல்
லக்ளென:உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் செக்ஸ்உறவு கொண்டு, அதை வீடியோவில் படம் பிடித்து அவர்களையே மிரட்டி பணம்பறித்து வந்த பல்கலைக்கழக பேராசிரியை கவிதா ராணி அவரது கூட்டாளியாலேயேபடுகொலை செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவுக்கு பெரும் தலைவலியாகஉருவெடுத்துள்ள இந்த விவகாரம் தொடர்பாக 2 அமைச்சர்கள் பதவியை ராஜினாமாசெய்துள்ளனர்.மீரட்டில் செளத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றிவந்தவர் கவிதா ராணி செளத்ரி. இவர் கடந்த அக்டோபர் 24ம் தேதி முதல் காணாமல்போனார்.
அவர் என்ன ஆனார், எங்ககு போனார் என்பது குறித்துத் தகவல் ஏதும் இல்லை. இச்சம்பவம் உ.பி. மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்கவிதா தங்கியிருந்த பல்கலைக்கழக விடுதி அறையிலிருந்து சில கடிதங்களைபோலீஸார் கைப்பற்றினர்.
அந்தக் கடிதங்களில் உ.பி. மாநில அமைச்சர் பாபுலால் தனக்கு 50க்கும் மேற்பட்டதடவை செல்போன் மூலம் மிரட்டல் விடுத்ததாக கவிதா குறிப்பிட்டிருந்தார். இதுபோலீஸாரைக் குழப்பியது.
இந்த நிலையில் ரவீந்திர பிரதான் என்பவர் போலீஸாரிடம் சிக்கினார். அவரிடம்நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
கவிதாவும், பிரதானும் இணைந்து முக்கியப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள்,அமைச்சர்கள் ஆகியோரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். ராஷ்டிரிய லோக்தள்கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான மிராஜுதீனுடன் பழக்கம்ஏற்படுத்திக் கொண்ட கவிதா அவருடன் செக்ஸ் வைத்துக் கொண்டார். அதைகவிதாவும், பிரதானும் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டனர்.
பின்னர் இதைக் கூறி தங்களுக்குப் பணம் தருமாறு மிராஜூதீனை மிரட்டியுள்ளனர்.பயந்து போன அவரும் ரூ. 35 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார். இந்தப்பணத்தைப் பிரித்துக் கொள்வதில், கவிதாவுக்கும், பிரதானுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதில்தான் கவிதா கொலை செய்யப்பட்டுள்ளார். இதை பிரதானே போலீஸாரிடம்ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து பிரதான் கூறுகையில், அமைச்சர்மிராஜூதீனுக்குத் தெரியாமல் அவரையும் கவிதாவையும் வீடியோவில் பதிவுசெய்தோம். பின்னர் அவரை மிரட்டி ரூ. 35 லட்சம் பணம் பறித்தோம்.
இந்தப் பணத்தில் பெரும்பாலான பகுதியை தனக்குத் தர வேண்டும் என கவிதாகூறினார். ஆனால் நான் ஏற்கவில்லை. இதையடுத்து அவரைத் தீர்த்துக் கட்ட முடிவுசெய்தேன். எனது நண்பர் யோகேஷுடன் சேர்ந்து கவிதாவைக் கொலை செய்தேன்.கடந்த அக்டோபர் 24ம் தேதி கவிதாவைக் கொலை செய்தோம்.
கவிதாவுக்கும், மேலும் பல அரசியல் பிரமுகர்களுக்கும் இடையே நெருங்கியதொடர்பு இருந்தது என்றும் பிரதான் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
புலந்தசாகர் பகுதியில் உள்ள கால்வாயில் கவிதாவின் பிணத்தைப் போட்டதாகபிரதான் கூறியதால் அப்பகுதியில் போலீஸார் பிணத்தைத் தேடி வருகின்றனர். ஆனால்இதுவரை கவிதாவின் உடல் சிக்கவில்லை.
இதற்கிடையே, அக்டோபர் 18ம் தேதிக்குப் பிறகு கவிதாவை தாங்கள் பார்க்கவில்லைஎன்று விடுதி நிர்வாகம் போலீஸாரிடம் தெரிவித்துள்ளது.
உ.பியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும்சூட்டைக் கிளப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் உ.பி. மாநில அமைச்சர்கள் இருவரின்பெயர் அடிபடுகிறது. ஒருவர் கவிதாவின் கடிதத்தில் இடம்பெற்றிருந்த பாபுலால்.இவர் தனது பதவியை செவ்வாய்க்கிழமை பிற்பகல் ராஜினாமா செய்தார். மிராஜூதீன்ஏற்கனவே ராஜினாமா செய்து விட்டார்.
இரு அமைச்சர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் அஜீத் சிங் தலைமையிலானராஷ்டி>ய லோக் தள் கட்சியைச் சேர்ந்தவர்கள். அஜீத்சிங்கின் தந்தையும், முன்னாள்பிரதமருமான சரண்சிங்கின் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில்தான் கவிதாவும்பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிதா செளத்ரியின் மிரட்டல் விவகாரம் குறித்து மிராஜூதீன் கூறுகையில், நான்அப்பாவி. எனக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சர்ச்சையால் நான்அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். நிரபராதி என நிரூபிக்கும் வரைநான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்றார்.
கவிதா எழுதியுள்ள கடிதத்தில் அமைச்சர் பாபுலால் தன்னுடன் கடந்த 8 நாட்களில்மொத்தம் 57 முறை செல்போனில் பேசியதாக கவிதா குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள், அமைச்சர்களின் பெயர்கள் கவிதா விவகாரத்தில் அடிபடுவதால்இதை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. ஆனால் இந்தக்கோரிக்கையை முதல்வர் முலாயம் சிங் யாதவ் நிராகரித்து விட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications