வைகோ-எக்ஸ்பிரஸ் மீது அரசு-திமுக வழக்கு
சென்னை:மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது முதல்வர் கருணாநிதி, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிஆகியோர் தலா ஒரு அவதூறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
கருணாநிதி சார்பில் தமிழக அரசின் வழக்கறிஞர் ஷாஜகான் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில்தாக்கல் செய்துள்ள மனுவில்,
மதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்திற்கு என் (கருணாநிதி) மீது வைகோ பழி சுமத்திப் பேசியுள்ளார்.
இதன் மூலம் எனது நன் மதிப்புக்கு களங்கம் விளைவித்துள்ளார். எனவே வைகோவை தண்டிக்க வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.
திமுக பொருளாளரும், மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி, கட்சியின் சார்பில் சென்னை எழும்பூர்பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.
அதில், திமுக தலைவர் கருணாநிதிதான் மதிமுக உட்கட்சிப் பூசலுக்குக் காரணம் என அவதூறாக பேசியுள்ளார்வைகோ. எனவே அவர் மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரி>யுள்ளார்.
இந்த வழக்கில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆசி>யர் மற்றும் வெளியீட்டாளரையும் ஆற்காடு வீராசாமிசேர்த்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி நாளை விசாரணை நடைபெறும் என அறிவித்தார்.
எல்ஜி, செஞ்சி நாளை முதல் அகதிகள்
இதற்கிடையே மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில்,
ஒவ்வொரு நிர்வாகிக்கும் ரூ. 2 லட்சம் கொடுத்து ஆள் பிடிக்கும் வேலையில் எல்.ஜியும், செஞ்சி ராமச்சந்திரனும்ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொதுக்குழு உறுப்பினரைக் கூட இழுக்கமுடியவில்லை.
இவர்களை வாழ்த்தி வாழ்க என்று கோஷம் போடக் கூட நான்கு பேர் இல்லாமல் தொண்டர்களால்நிராகரிக்கப்பட்டவர்கள்தான் எல்.ஜியும், செஞ்சியும்.
சேலத்தில் இவர்கள் கூட்டியிருப்பது பொதுக்குழுவே அல்ல, இது புதுக்குழு. தனது சொந்த மாவட்டமானதஞ்சையில் பொதுக்குழுவைக் கூட்டியிருக்கலாமே எல்.ஜி? ஏன் கூட்டவில்லை?
எல்.கணேசன் அரசியல் களம் கண்ட ஓரத்தநாடு நகர செயலாளர் மணி சுரேஷ்குமாரும், ஓரத்தநாடு ஒன்றியச்செயலாளர் ராமைய்யாவும் வைகோ பக்கம்தான் உறுதியாக இருக்கிறார்கள்.
செஞ்சி ராமச்சந்திரனின் சொந்த ஊரான அவியூரில் உள்ள கிளைச் செயலாளரே செஞ்சி ராமச்சந்திரனுக்குஆதரவாக இல்லை. இதுதான் அவர்களது நிலை.
நாளைய கூட்டத்திற்குப் பின்னர் இருவரும் அரசியல் அகதிகள் வரிசையில் சேர்ந்து விடுவார்கள். சீண்டுவார்இல்லாமல் இவர்கள் தவிக்கப் போவதை நாடு பார்க்கப் போகிறது.
சேலத்தில் நாளை ஒரு நகைச்சுவை நாடகம் அரங்கேறப் போகிறது. பொழுது போகாமல் இருப்பவர்கள் அந்தப்பொதுக்குழுவுக்குப் போகலாம். ஒரு வேளை உணவு கொடுப்பார்கள் என்றார் சம்பத்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications