பக்ரீத்-குர்பானிக்காக ஒட்டகம் வெட்ட தடை!
சென்னை:பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தில் குர்பானி கொடுப்பதற்காக ஒட்டகங்களை பலியிடுவதற்கு சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பக்ரீத் பண்டிகை ஜனவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக ஆடு, மாடுகளை குர்பானி பலியாககொடுப்பது வழக்கம். அதே போல ஒட்டகங்களும் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் 8 ஒட்டகங்களை சென்னைக்குக் கொண்டு வந்துள்ளது.வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை பகுதியில் உள்ள மசூதியில் இந்த ஒட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் மொத்தம் 92 ஒட்டகங்கள் குர்பானியாக கொடுக்கப்படவுள்ளதாக தமுமுக தொண்டர்அணிச் செயலாளர் முகம்மது ரஃபி கூறியுள்ளார்.
ரஃபி கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாகத்தான் இங்கு ஒட்டகங்கள் குர்பானியாக கொடுக்கப்படுகின்றன.ஆந்திராவிலிருந்து ஒரு ஒட்டகம் ரூ. 30,000 என விலை கொடுத்து 8 ஒட்டகங்களை 2 லாரிகளில் கொண்டுவந்தோம்.
ஆந்திர மாநிலத்தில் ராஜஸ்தான் ஒட்டகங்கைள கொண்டு வந்து சந்தை போல நடத்துகிறார்கள். அதேபோல அரசுஅனுமதியுடன் அடுத்த ஆண்டு சென்னையிலும் ஒட்டக சந்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
ஆனால், பாரதீய பிராணிகள் நல சங்கம் சார்பில் ஒட்டகங்களை பலியிட தடை விதிக்கக் கோரிஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், ஒட்டகங்கள்உரிய அனுமதி இல்லாமல் கொண்டு வரப்பட்டுள்ளதால் அவற்றை வெட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்துஉத்தரவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications