இந்தக் காதலர்களையும் பிரிக்க முயலும் ஜாதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:காது கேளாத, வாய் பேச முடியாத தங்களது காதலை ஜாதியைக் காரணம் காட்டிகாதலனின் பெற்றோர் ஏற்க மறுப்பதாலும் மிரட்டுவதாலும் தங்களது திருமணத்திற்குபாதுகாப்பு தர வேண்டும் என்று கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையர்அலுவலகத்தில் காதலருடன் வந்து பெண் புகார் கொடுத்துள்ளார்.

Sujathaசென்னை ஓட்டேரியைச் சேர்ந்த செல்வராஜின் மூத்த மகள் சுஜாதா (வயது 30). காதுகேளாத, வாய் பேச முடியாதவர் ஆவார். 10ம் வரை படித்துள்ள சுஜாதா, கிண்டியில்உள்ள வாய் பேச முடியாதோர், காது கேளாத தட்டச்சு வகுப்பில் சேர்ந்து தட்டச்சு கற்றுவந்தார்.

இதே பள்ளியில் சுஜாதாவைப் போலவே குறைபாடு கொண்ட நங்கநல்லூரைச் சேர்ந்தசாய்ராமின் மகன் ராஜேஷும் (இவருக்கும் வயது 30) தட்டச்சு படித்து வந்தார்.

வாய் பேசாத அவர்களின் மனங்கள் பேசிக் கொண்டன. கை அசைவிலும், கண்அசைவிலும் இருவரும் காதலை வளர்த்தனர்.

தங்களது காதலை சுஜாதா தனது தாயார் மல்லிகாவிடம் கடிதம் மூலமாக தெரிவித்தார்.மகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட மல்லிகா, காதலுக்குப் பச்சைக் கொடிகாட்டினார், ஆசிர்வதித்தார். மனதுக்குப் பிடித்த ராஜேஷையே திருமணம் செய்துவைப்பதாகவும் உறுதி அளித்தார். சுஜாதாவின் தந்தையும் இதை எதிர்க்கவில்லை.

Rajeshஇதையடுத்து மகிழ்ந்து போன சுஜாதா, ராஜேஷை தனது வீட்டுக்கு அழைத்து வந்துபெற்றோரிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு ராஜேஷைப் பிடித்துப் போய்விட்டது.

ஒரு பக்க டிராக் கிளியர் ஆகி விட்டதால் தனது வீட்டில் காதலை தெரிவித்தார்ராஜேஷ். அவர்களும் சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நம்பிய ராஜேஷுக்குஅதிர்ச்சியூட்டும் வகையில், ராஜேஷின் பெற்றோர் காதலை ஏற்க மறுத்து விட்டனர்.

ஆனால் அதை நிராகரித்த ராஜேஷ், மணந்தால் சுஜாதாவைத் தான் மணப்பேன் என்றுஉறுதியாக கூறி விட்டார்.

இந்த நிலையில் ராஜேஷும், சுஜாதாவும் மாநகர காவல்துறை ஆணையர்அலுவலகத்திற்கு வந்து தங்களது காதலுக்கு பாதுகாப்பு கோரி மனு கொடுத்தனர்.

மகளின் மெளனக் காதல் குறித்து தாய் மல்லிகா கூறுகையில், நாங்கள் வன்னியர்கள்.ராஜேஷ் பிராமணர். எங்களது மகளின் காதலைப் புரிந்து கொண்டு அதை நாங்கள்ஏற்று விட்டோம். ஆனால் ராஜேஷின் குடும்பத்தினர் ஜாதியைக் காரணம் காட்டி ஏற்கமறுக்கிறார்கள்.

ஆனால் எனது மகளைக் கல்யாணம் செய்து கொள்வதில் ராஜேஷ் உறுதியாக உள்ளார்.இதனால் ஜனவ> 24ம் தேதி திருமணம் செய்து வைக்க முடிவு செய்துளோம். ஆனால்ராஜேஷ் வீட்டிலிருந்து மிரட்டல் வந்ததால் போலீஸ் பாதுகாப்பு கோரி மனுகொடுத்துள்ளோம். அவர்களுக்கு போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.

ராஜேஷ், சுஜாதாவிடம் மட்டும்தானா உள்ளது குறைபாடு?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+