இனிமே சண்ட போட மாட்டோம்-காங் தலைவர்
சென்னை:கோஷ்டிப் பூசலை விட்டு விட்டு காங்கிரஸார் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்என தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி கடந்த 122 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் வெள்ளையரானஏ.ஓ. ஹியூம் என்பவரால் தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டதன் 122வதுஆண்டு விழாவை இன்று காங்கிரஸார் கொண்டாடினர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்க>ஸ் கொடியேற்றி கட்சியின் பிறந்த நாளைக்கொண்டாடினர். அதன் பின்னர் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம்பேசுகையில்,
கட்சியில் கோஷ்டிப் பூசல் நீண்ட காலமாகவே இருக்கிறது. தமிழகத்தில் காமராஜர்ஆட்சியை கொண்டு வர முயற்சி எடுக்க இந்த நாளில் உறுதி பூண்டுள்ளோம்.
அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து, கோஷ்டிப் பூசல் இல்லாமல் கட்சியைவளர்ப்போம். காங்கிரஸ் ஆட்சி அமைய பாடுபடுவோம்.
கட்சியில் செயல்படாத நிர்வாகிகள் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள். புதியதலைவர்கள் நியமிக்கப்பட்டு கட்சி புதுப்பிக்கப்படும்.
செயல்படாத மாவட்டத் தலைவர்கள் பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில்மாற்றம் மேற்கொள்ளப்படும். சில தலைவர்கள் கட்சியை வலுப்படுத்தும்முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கிறார்கள்.
திமுக ஆட்சியில் பங்கு குறித்து கட்சி மேலிடத்தில் கூறி விட்டோம். இறுதி முடிவைமேலிடம்தான் எடுக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.
ஒற்றுமையா இருந்தா அது காங்கிரஸா? மிஸ்டர் கிருஷ்ணசாமி..












Click it and Unblock the Notifications