கருணாநிதி கோபம்-பிரதமருடன் பாலு சந்திப்பு
டெல்லி:மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமரை சந்தித்த சில மணி நேரங்களில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு,பிரதமரை சந்தித்து, மதிமுக பிரச்சினையில் தேவையில்லாமல் பிரதமர் மற்றும் சோனியா காந்தியின் பெயரைவைகோ இழுப்பதாக கருணாநிதியின் அதிருப்தியைத் தெரிவித்தார்.
வைகோ பிரதமரை சந்தித்து விட்டுச் சென்ற சில மணி நேரங்களில் மத்திய நெடுஞ்சாலைத்துறை துறை அமைச்சர்டி.ஆர்.பாலு பிரதமரைச் சந்தித்தார். அவ>டம் முதல்வர் கருணாநிதியின் கடிதம் ஒன்றை வழங்கிய டி.ஆர்.பாலு,மதிமுக விவகாரத்தில் தேவையில்லாமல் பிரதமர் மற்றும் சோனியா காந்தியின் பெயரை வைகோ இழுப்பதற்குதிமுகவின் கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமரை நான் சந்தித்தபோது, தமிழக அரசு குறித்தும், முதல்வர் கருணாநிதி குறித்தும் வைகோவிடம்எந்தவிதமான ஆட்சேபகர கருத்தையும் தான் தெரிவிக்கவில்லை என்பதை முதல்வர் கருணாநிதியிடம்தெரிவிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். கருணாநிதி மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும்பிரதமர் கூறினார்.
தேவையில்லாமல் மன்மோகன் சிங் பெயரையும், சோனியா காந்தியின் பெயரையும் இந்த விவகாரத்தில் இழுத்துமலிவான விளம்பரம் தேட முயல்கிறார் வைகோ. இது கடும் கண்டனத்துக்குரியது.
முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மதிமுகவை உடைத்து, அக்கட்சியின் தலைமை அலுவலகமானதாயகத்தை கைப்பற்ற துடிப்பது போல வைகோ காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்.
டிசம்பர் 25ம் தேதி தாயகத்தில் நடந்த மதிமுக கூட்டத்தின்போது எந்தவிதமான வன்முறையும், அசம்பாவிதமும்நடந்து விடக் கூடாது என்பதில் முதல்வர் கருணாநிதி தீவிரமாக இருந்தார். முழு அளவில் போலீஸ் பாதுகாப்புகொடுக்கவும் அவர் உத்தரவிட்டார். அமைதியான முறையில் அந்தக் கூட்டம் நடைபெற உதவினார்.
முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பேசி வரும் வைகோ மீது சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் திமுக தரப்பில்ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று பாலு கூறியுள்ளார்.
வைகோவை பிரதமர் சந்தித்தது திமுகவை எரிச்சல்படுத்தியுள்ளது என்பது பாலுவின் அறிக்கை மூலம் தெரிகிறது.
திமுகவும், மதிமுகவும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொடர்ந்து உறுப்பு கட்சிகளாக நீடித்து வருகின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது. மதிமுகவை கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் தீவிரமாகவலியுறுத்தியது திமுக. ஆனால் அதை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் திமுக இந்தக்கோரிக்கையை விட்டு விட்டது.
தற்போது மதிமுகவுடன் மீண்டும் கடும் மோதல் மூண்டுள்ள சூழ்நிலையில், மதிமுகவை கூட்டணியிலிருந்து நீக்ககருணாநிதி மீண்டும் தீவிரமாக முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைகோவும் ஜார்ஜ் புஷ்சும்: கருணாநிதி கிண்டல்
சோனியா காந்தி தனது கட்சி அலுவலகத்தைக் காப்பாற்றினார்என்று கூறியுள்ள வைகோ, ஜார்ஜ் புஷ்ஷும், ரஷ்ய அதிபர் புடினும்தன்னைக் கட்டித் தழுவி ஆறுதல் கூறினார்கள் என்று சொன்னாலும் சொல்வார் என்றுமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications