அமெரிக்க மாணவர்களுக்கு பாடம் நடத்திய லாலு!
டெல்லி:அமெரிக்காவின் ஹார்வர்ட் மற்றும் வார்ட்டன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ், இந்திய ரயில்வேயை லாபப் பாதையில் கொண்டு சென்றது எப்படி என்பது குறித்து பாடம் நடத்திஅசத்தினார்.
தடம்புரண்டு, தட்டுத் தடுமாறி ஓடிக் கொண்டிருந்த இந்திய ரயில்வே துறை லாலு பிரசாத் யாதவ் பதவி ஏற்றபிறகு லாபப் பாதையில் ஓடத் தொடங்கியுள்ளது. ரயில்வே துறை கடந்த ஆண்டு ரூ. 13,000 கோடி அளவுக்குலாபம் சம்பாதித்துள்ளது.
இதனால் இந்தியாவிலேயே சிறந்த அமைச்சர் என்ற பெருமையும் லாலுவுக்குக் கிடைத்துள்ளது. லாலுவின் இந்தமந்திர சாதனையை அனைவரும் சிலாகித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் அகமதாபாத்தில் உள்ளஇந்திய நிர்வாகவியல் கழகம் (ஐஐஎம்) அவரை அழைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்த வைத்தது.
இந் நிலையில் அமெரிக்காவின் ஹார்வர்ட் மற்றும் வார்ட்டன் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாடம் நடத்திகலக்கியுள்ளார் லாலு. ஹார்வர்ட் மற்றும் வார்ட்டன் பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட வர்த்தகப் பள்ளிகளைச்சேர்ந்த 130 மாணவ, மாணவியர் டெல்லி வந்துள்ளனர்.
அவர்களுடன் 7 பேராசிரியர்களும் வந்துள்ளனர். இவர்களுக்கு இந்திய ரயில்வேயை லாபப் பாதையில் கொண்டுசென்றது எப்படி என்பது குறித்து லாலு பாடம் நடத்தினார். மிக அமைதியாக பவர் பாயிண்ட் பிரசன்டேசனுடன்,லாலுவின் ஆங்கிலம் கலந்த இந்திப் பேச்சை அமெரிக்க மாணவர்கள் உன்னிப்பாக கவனித்தனர்.
லாலுவின் பேச்சு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறப்பட்டது.
அமெ>க்க மாணவர்களிடையே லாலு பேசுகையில்,
நான் மிக மிக சாதாரண ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன். கிராமவாசி. ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மனிதன். ஆனால் எனது சிறு வயதிலிருந்தே ஜவஹர்லால் நேருவின் கொள்கைகளும், அவரதுசெயல்பாடுகளும் எனது ரத்தத்தில் ஊறிப் போயிருந்தன.
அவை தான் என்னை சோஷலிலசவாதியாக்கின. நேருவின் கொள்கைளைக் கடைப்பிடித்துத்தான் இந்தியரயில்வேயை இன்று லாபப் பாதைக்கு இட்டு வந்துள்ளேன். லாபம் ஈட்ட வேண்டுமானால் தனியார்மயமாக்குஎன்ற கொள்கை எனக்கு ஏற்புடையதல்ல.
இந்திய ரயில்வே, இந்தியாவின் மிக முக்கியமான ஒரு கட்டமைப்பாகும். இந்தியாவின் முக்கிய நரம்பு மண்டலம்இதுதான்.
என்னிடம் ரயில்வே துறை பொறுப்பு கொடுக்கப்பட்டபோது அது மிகவும் மோசமான நிலையில் இருந்தது.கிட்டத்தட்ட திவால் நிலைமை. ஆனால் தற்போது ரூ. 13,000 கோடி லாபத்தை ரயில்வே ஈட்டியுள்ளது.
இது சாதாரண டிரைலர்தான் இனிமேல்தான் மெயின் படமே வரப் போகிறது என்று தனக்கே உரிய பாணியில்பேச்சை முடித்தார் லாலு.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பீகாரைப் பூர்விமாகக் கொண்ட ஹார்வர்ட் மாணவர் குனார்க்சிங் கூறுகையில்,பீகார் முதல்வராக லாலு பிரசாத் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், ரயில்வே அமைச்சராக அவர் மிகசிறப்பாக பணியாற்றுகிறார் என்றார்.
மாணவ, மாணவியர்கள் லாலுவிடம் பல்வேறு கேள்விகளையும் கேட்டனர். அவற்றுக்கு மிகவும் லாவகமாக,தனக்கே உரிய நகைச்சுவை கலந்து பதில் கொடுத்து அசத்தினார் லாலு.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு மாணவர் லாலுவிடம், இந்தியாவின் பிரதமராகும் ஆசை உள்ளதா என்றுகேட்டபோது, எல்லோருக்கும் அந்த ஆசை இருக்கிறது. அதேபோல எனக்கும் உள்ளது. ஆனால் ரயில்வேஅமைச்சர் வேலையில் பிசியாக இருப்பதால், அந்த ஆசையை பெண்டிங்கில் வைத்துள்ளேன். அப்புறம்பார்க்கலாம் என்றார் சிரித்தபடி.
அனைத்து மாணவர்களுக்கும் சந்தன மாலை அணிவித்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்ற லாலு ஒவ்வொருமாணவரிடமும் தனித் தனியாகவும் பேசினார்.
இந்தியர்களைக் கலக்கி வந்த லாலு இப்போது கடல் கடந்து அமெரிக்காவையும் அசத்த ஆரம்பித்து விட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications