நாளை மதிமுக போட்டி பொதுக் குழு-களப்பணியில் திமுக தீவிரம்!
சேலம்:சேலத்தில் நாளை எல்ஜியும் செஞ்சியும் கூட்டியுள்ள மதிமுக போட்டி பொதுக் குழுக்கூட்டம் நடக்கிறது.
வைகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரை கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கிகம்பத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இருவரையும் கட்சிப்பொறுப்புகளிலிருந்து நீக்கி வைகோ உத்தரவிட்டார்.
ஆனால் இதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் தடை வாங்கி விட்டனர். இந்தப் பின்னணியில் சமீபத்தில்சென்னையில் மதிமுகவின் உயர் நிலைக் குழுக் கூட்டம் பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்தது.
அதில் மதிமுகவின் பொதுக் குழுக் கூட்டத்தை ஜனவரி 10ம் தேதி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதற்குப்போட்டியாக எல்.கணேசன் கூட்டியள்ள பொதுக் குழுக் கூட்டம் நாலை சேலத்தில் நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரனுக்குதிமுக முழு அளவிலான உதவிகளையும் செய்து வருகிறது.
சேலம்-ஓமலூர் மெயின் ரோட்டில் அண்ணா பூங்கா எதிரில் உள்ள சுமங்கலி திருமணமண்டபத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு எல்.கணேசன் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்புக்கும் தரப்படும் என்று தெரிகிறது.
பொதுக் குழுக் கூட்டத்தையொட்டி சேலத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கூட்டம் நடக்கும் கல்யாணமண்டபத்திலிருந்து ஓமலூர் செல்லும் சாலை நெடுகிலும் மதிமுக கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர சேலத்தின் முக்கியபகுதிகளான 5 ரோடு, 4 ரோடு, புதிய பேருந்து நிலையம், ஆட்சித் தலைவர் அலுவலகப் பகுதி, அண்ணா சிலை ஆகியஇடங்களிலும் கொடிகள், தொரணங்கள் படபடக்கின்றன.
பொதுக் குழுக் கூட்டத்தை முடித்து விட்டு காந்தி மைதானத்தில் பொதுக் கூட்டத்திற்கும் எல்.கணேசன் குழுவினர் முடிவுசெய்துள்ளனர். இதில் செஞ்சி ராமச்சந்திரனும், எல்.கணேசனும் பேசவுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மதிமுக அதிருப்தியாளர்களும் இக் கூட்டத்தில்பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதிலிருந்து திரண்டு வரும்தொண்டர்களைத் தங்க வைப்பதற்காக கல்யாண மண்டபமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்சி, கொடி மற்றும் அலுவலகத்தை கைப்பற்ற வேண்டுமானால்பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். இதனால்பொதுக் குழு உறுப்பினர்களை தங்கள் பக்கமாகத் திருப்ப எல்ஜியும் செஞ்சியும் இரவுபகலாக தொலைபேசியில் மாநிலம் முழுவதும் உள்ள உறுப்பினர்களிடம் பேசி
வருகின்றனர்.தங்களுக்கு ஆதரவு தந்தால் முக்கிய பதவிகள் தருவதாகவும், திமுக உதவியோடுஅரசின் முக்கிய காண்ட்ராக்ட்களை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துவருகின்றனர். மேலும் லட்சக்கணக்கில் பணமும் தருவதாக கூறுவதாகத் தெரிகிறது.எல்ஜியின் இந்த பண உறுதிமொழிக்குப் பின்னால் திமுக இருப்பதாக வைகோதரப்பினர் கூறுகின்றனர்.
சேலத்தின் முக்கிய திமுக புள்ளியான அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும் களத்தில்இறங்கி எல்ஜி-செஞ்சி கூட்டத்துக்கு முழு உதவிகளையும் செய்து வருகிறார்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் உத்தரவுப்படி திமுகவினர் சேலம், நாமக்கல் மாவட்டமதிமுகவினரோடு பேசி வளைத்து வருவதாகத் தெரிகிறது. சேலம் கூட்டத்துக்குவந்தால் வெறுங்கையோடு போக வேண்டிய நிலை இருக்காது, நன்றாககவனிக்கப்படுவீர்கள் என்ற உத்தரவாதமும் தரப்பட்டு வருவதாக வைகோ தரப்பினர்
கூறுகின்றனர்.இதற்கிடையே எல்.ஜி தரப்பு நடத்தும் பொதுக் குழுவுக்குப் போட்டியாக சேலம் மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட நிர்வாகிகள்கூட்டம் நடைபெறுகிறது. ஐந்து ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. மாவட்டச் செயலாளர்தாமரைக்கண்ன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்வதாக உறுதிமொழி கொடுத்து எழுதித் தந்துள்ளதாகதாமரைக்கண்ணன் கூறியுள்ளார். இதற்கிடையே, சேலம் மாவட்டத்தில் உள்ள 8 பொதுக்குழு உறுப்பினர்களில் 4 பேர்தங்களுக்கு ஆதரவாகவும், 25 ஒன்றியச் செயலாளர்களில் 5 பேர் ஆதரவு தந்துள்ளதாகவும் எல்.கணேசன் தரப்பு கூறியுள்ளது.
கடத்தல் முயற்சி:
இதற்கிடையே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 63 பொதுக் குழு உறுப்பினர்களில் பலர் திமுகவினரின் உதவியோடு கடத்தப்படுவதாக விழுப்புரம்மாவட்ட மதிமுக செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார். இதே போன்ற குற்றச்சாட்டை பிற மாவட்டச் செயலாளர்களும் கூறி வருகின்றனர்.
670 பேர் ஆதரவு:
இந் நிலையில் மொத்தமுள்ள பொதுக் குழு உறுப்பினர்கள் 1,100 பேரில் 670 பேர் தாங்கள் கூட்டும் கலந்து கொள்வார்கள் என செஞ்சி ராமச்சந்திரன்கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சேலத்தில் நடக்கும் கூட்டத்தில் அரசியலில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும். மதிமுகவை நான் தான் உருவாக்கினேன். அதனால், நான் எந்தகட்சியிலும் சேரமாட்டேன். மதிமுக எங்களுடையது.
சேலம் பொதுக் குழுவில் 1,100 பேரில் 670 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
எல்.ஜி.பேட்டி:
அதே போல தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.கணேசன், மதிமுகதொடங்கிய 1993ம் ஆண்டிலிருந்து அனைத்து பொதுக்குழுவுக்கும் நான் தலைமைதாங்கியுள்ளேன்.
சேலத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்துக்கும் நான்தான் தலைமைதாங்குவேன். இந்த பொதுக்குழுவில் மதிமுக புதுப் பொலிவு பெறும். தொடர்ந்துதோல்வியைத் தழுவி வரும் மதிமுக தொடர் வெற்றிகளைக் குவிக்கும் வகையில்புதிய செயல் திட்டங்கள் தீட்டப்படவுள்ளன. அதுதொடர்பான தீர்மானங்கள்நிறைவேற்றப்படவுள்ளன.
மதிமுகவில் 1,100 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 100 பேர் வேறுகட்சிகளுக்குப் போய் விட்டனர். மீதமுள்ள 1,000 பேரில் 600க்கும்மேற்பட்டவர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது.
நான் விவசாயி, ஆனால் விவசாயம் பார்த்ததில்லை. சட்டம் படித்தவன், சட்டத்தொழிலை செய்துள்ளேன். அரசியல்வாதிதான், ஆனால் அரசியல் செய்பவன்இல்லை, பண்பு மறக்காதவன் என்றார் எல்.ஜி.












Click it and Unblock the Notifications