மம்தா-கலாமுடன் தே.ஜ.கூ தலைவர்கள் சந்திப்பு
டெல்லிமம்தா பானர்ஜி விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை தேசியஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளனர்.
டாடா நிறுவனத்திற்கு விவசாய நிலங்களை கொடுத்ததை திரும்பப் பெற வேண்டும் என்று மேற்கு வங்க அரசைவலியுறுத்தி திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் சாகும் வரை உண்ணாவிரதம்இருந்து வருகிறார்.
இன்று 25வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பில்ஆழ்த்தியுள்ளது. மம்தாவின் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் மம்தாவை நேரில் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி, மம்தாவின்போராட்டத்துக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணித்தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நேரில் சந்தித்துமம்தா விவகாரத்தில் தலையிட வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் இன்று கலாமை சந்திக்கவுள்ளனர்.
இதற்கிடையே, மம்தாவின் உடல் நிலை தொடர்ந்து மோசமாகி வருவதால் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றவேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதை ஏற்க மம்தா மறுத்து வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications