தற்கொலை-போலி பெட்ரோல் ராமர் மிரட்டல்
சென்னை:எனது மூலிகை பெட்ரோல் கண்டுபிடிப்புக்கு இந்திய பெட்ரோலிய கழகத்தின்அங்கீகாரத்தைப் பெற்றுத் தர உதவ வேண்டும். இல்லாவிட்டால் நான் தீக்குளித்துத்தற்கொலை செய்து கொள்வேன் என்று மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளைமுதல்வர் கருணாநிதிக்கு எச்சரிக்கையுடன் கலந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. சில ஆண்டுகளுக்கு முன்புஇவர் மூலிகையிலிருந்து பெட்ரோல் கண்டுபிடித்ததாக அறிவித்தபோது நாடேபரபரப்பில் ஆழ்ந்தது.
ராமர் பிள்ளையின் பேட்டிகள், தொலைக்காட்சி, நாளிதழ், வார இதழ் எனமீடியாக்களில் பளிச்சிட்டன. தன்னைத் தேடி வந்தவர்களுக்கு மூலிகையிலிருந்துபெட்ரோல்தயாரித்துக் காண்பித்து அசத்தினார் ராமர்.
இந்த நிலையில், ராமர் பிள்ளையின் கண்டுபிடிப்பை ஆராய்ந்து பார்த்த சென்னைஐஐடி உள்ளிட்ட பல்வேறு அறிவியல் நிறுவனங்களின் விஞ்ஞானிகள் இதுபெட்ரோல் அல்ல என்று கூறியதால் ராமர் பிள்ளை புஸ்வானம் ஆனார்.
இருப்பினும் தனது கண்டுபிடிப்பு பெட்ரோல்தான் என்று தொடர்ந்து கூறி வந்த ராமர்பிள்ளை, தனது படைப்புக்கு அங்கீகாரம் பெற இடையில் பாஜகவில் சேர்ந்துபார்த்தார். அங்கும் ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்து வந்தராமர் பிள்ளை அதன் பின்னர் சத்தம் இல்லாமல் போய் விட்டார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது பெட்ரோல் விவகாரத்தை கையில்எடுத்துள்ளார் ராமர் பிள்ளை.
அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், கடந்த வாஜ்பாய் ஆட்சியின்போதுஅப்போதைய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் முரளி மனோகர் ஜோஷிமுன்னிலையில், நாக்பூரைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் எனது படைப்பைப்பரிசோதித்து இது பெட்ரோலுக்கு இணையான எரிபொருள் என அறிவித்தனர்.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் எனது எரிபொருளை டேராடூனில் உள்ள இந்தியபெட்ரோலியக் கழகத்தில் பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்தார்.
எனது எரிபொருளின் மூல பார்முலாவை கூற வேண்டும் என்று இந்திய பெட்ரோலியகழக விஞ்ஞானிகள் கோரினர். அதை நான் தரத் தயாராக உள்ளேன்.
எனது கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரத்தை இந்திய பெட்ரோலியக் கழகம்தான்வழங்க வேண்டும். எனவே நாக்பூர் விஞ்ஞானிகள் எனது எரிபொருள் குறித்துநடத்திய பரிசோதனை முடிவுகளை முதல்வர் கருணாநிதியும், நிதியமைச்சர்ப.சிதம்பரமும் பெற்று அதை இந்திய பெட்ரோலியக் கழகத்திடம் அளித்து எனதுகண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க உதவ வேண்டும்.
எனது கோரிக்கையை டிசம்பர் 31ம் தேதிக்குள் தமிழக அரசு ஏற்காவிட்டால் ஜனவரி1ம் தேதி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் ராமர்பிள்ளை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications