ஈராக்குக்காக உயிர்த் தியாகம் செய்கிறேன்-சதாம்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:என்னை தூக்கிலிட்டால், அது ஈராக்குக்காவும், எனது மக்களுக்காகவும் நான் செய்யும்தியாகம் ஆகும். அதற்காக தூக்கு மேடைக்குச் செல்ல நான் தயாராக இருக்கிறேன்என்று தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சதாம் உசேன் வீராவேசமாககூறியுள்ளார்.

துஜைல் நகரில் 148 ஷியா முஸ்லீம்களை கொலை செய்த வழக்கில் தனி நீதிமன்றம்சதாம் உள்ளிட்ட 3 பேருக்கு விதித்த தூக்குத் தண்டனையை மேல் முறையீட்டுநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

ஈராக் சட்டப்படி 30 நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற வேண்டும். ஆனால்தூக்குத் தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பது குறித்து இன்னும் ஈராக்அரசு .டிவு செய்யவில்லை. இருப்பினும் சதாமை தூக்கிலிட அரசு உறுதியாகஇருப்பதாக தெரிகிறது.

சதாம் தூக்கிலிடுவதை தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பவும் ஈராக் அரசுதிட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சதாமைத் தூக்கிலிட்டால் ஈராக்கில் பெரிய அளவில் வன்முறை மூளும் அபாயம்இருப்பதால் சதாமைத் தூக்கிலிடுவதை உடனடியாக செய்ய ஈராக் அரசு யோசிப்பதாகதெரிகிறது.

இந்த நிலையில் தனி நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்துசிறையிலிருந்தபடி ஈராக் மக்களுக்கு சதாம் எழுதிய கடிதம் ஒன்றை அவரதுவழக்கறிஞர் வெளியிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் ஈராக் நாட்டுக்காகவும், தனது மக்களுக்காகவும் உயிரைத் தியாகம்செய்யத் தயாராகி விட்டதாக சதாம் வீராவேசமாக கூறியுள்ளார். கடிதத்தில் சதாம்கூறியுள்ளதாவது:

ஈராக் மிகப் பெரிய நாடு. பெருமைக்குரிய நாடு. ஈராக் மக்கள் தொடர்ந்துஒற்றுமையாகவும், சகிப்புத்தன்மையுடனும், கருணை மனப்பாங்குடனும் வாழவேண்டும்.

ஈராக் நாட்டுக்காக எனது உயிரைத் தியாகம் செய்ய நான் தயாராகி விட்டேன். எனதுமக்களுக்காகவும், மொழிக்காகவும் இந்த தியாகத்தை நான் செய்யத் தயாராகிவிட்டேன். நான் தூக்கிலிடப்படுவதை நான் தியாகமாக கருதுகிறேன்.

என் அன்புக்குரிய ஈராக் மக்களே, உங்களிடமிருந்து நான் விடைபெறுகிறேன். எனதுஆன்மா கருணை மிக்க இறைவனிடம் செல்கிறது. ஈராக் வாழ்க, பாலஸ்தீனம் வாழ்க,புனிதப் போர் வாழ்க, முஜாஹிதீன் வாழ்க, அல்லாஹு அக்பர்! என்று தனதுகடிதத்தில் சதாம் உசேன் எழுதியுள்ளார்.

சதாம் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் ஈராக்முழுவதும் பரபரப்பு அதிகரித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+