சென்னையில் 5 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் ஓடும்!
சென்னை:ரூ. 7,000 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகரில் அமைக்கப்படவுள்ள மெட்ரோரயில் இன்னும் 5 ஆண்டுகளில் ஓடத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலைக் குறைக்க டெல்லியில் உள்ளதைப் போலமெட்ரோ ரயில் போக்குவரத்தை அறிமுகம் செய்ய திமுக அரசு திட்டமிட்டது.
மத்திய அரசுடன் இணைந்து இந்தத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றவுள்ளது.டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் இந்தத் திட்டத்திற்கான ஆலோசகராகசெயல்படவுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பான ஆய்வறிக்கையை டெல்லி மெட்ரோரயில் கார்ப்பரேஷன் தமிழக அரசிடம் வழங்கியுள்ளது.
முதலில் திருவொற்றியூ>ல் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலும்,பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு வரையிலும் 45 கிலோமீட்டர் தொலைவுக்குமெட்ரோ ரயில் பாதையை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கு ரூ.5,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது அந்தத் திட்டத்தில் மறு ஆய்வு நடத்தி புதிய ரயில் பாதை இறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி தண்டையார்பேட்டை சுங்கச்சாவடியிலிருந்துபூந்தமல்லி சாலை வழியாக எழும்பூர், அமைந்தகரை, அரும்பாக்கம், 100 அடி சாலை,கோயம்பேடு, அசோக் பில்லர் வழியாக கிண்டி வரை ஒரு பாதை அமைக்கப்படும்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து அண்ணா சாலை, கிண்டி வழியாகமீனம்பாக்கம் ரயில் நிலையம் வரை இன்னொரு பாதை போடப்படும்.
சுங்கச்சாவடியிலிருந்து எழும்பூர் வரை தரைக்கு அடியிலும் மற்ற பாதைகள்சாலைகளின் நடுவே தூண்கள் அமைத்து பாலத்திலும் அமைக்கப்படும். இருவழிப்பாதையாக இது அமையும்.
வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ள பறக்கும் ரயில் பாதையையும் கிண்டியில்இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு ரூ. 7,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தரைக்குகீழ் ரயில் பாதை அமைக்க ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 200 கோடி செலவாகும்.அதேசமயம் பாலத்தின் மீது ரயில் பாதை அமைக்க இதில் பாதி தொகைதான்செலவாகும்.
அடுத்த ஆண்டு இத்திட்டம் தொடங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் முடிக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதம் மெட்ரோ ரயில் பாதையில்அமையவுள்ள ரயில் நிலையங்கள் குறித்து இறுதி செய்யப்படவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications