சிறுவன் அரவிந்த் கொலை-3 மாணவர்கள் கைது
சென்னை:சென்னை சாலிகிராமத்தில் 11 வயது சிறுவன் அரவிந்த் கடத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2மாணவர்கள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். செலவுக்கு பணம் தேவைப்பட்டதால்சிறுவனைக் கடத்தி பணம் கேட்டு பின்னர் அரவிந்தைக் கொலை செய்ததாக அந்த மூவரும் பேரும்போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னை சாலிகிராமம் லோகையா காலனியைச் சேர்ந்த அரவிந்த் செவ்வாய்க்கிழமை இரவு கடத்தப்பட்டு அன்றுஇரவே கொடூரமாக கொலை செய்யப்பட்டு விருகம்பாக்கம் தொலைபேசி இணைப்பகத்திற்குப் பின்னால் உள்ளபுதரில் போடப்பட்டான்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் அரவிந்த்தைக் கொன்ற கொடூரநபர்களைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுகுற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீஸார் மும்முரமாக ஈடுபட்டனர்.
அரவிந்த்தின் தந்தை கார்த்திகேயன், தாயார் அமுதா ஆகியோரிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டது.அவர்களுக்கு யாருடனாவது முன்விரோதம் இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுதவிர கும்பகோணம்,நாகப்பட்டனம் ஆகிய ஊர்களிலும் தனிப்படைகள் விரைந்தன.
விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள், ரவுடிகளையும் போலீஸார் ஒருவர் விடாமல்முழுமையாக வளைத்து விசாரணை நடத்தினர்.
அரவிந்த்தின் தாயார் அமுதா மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கிறார். அவருக்கும், குழுவைச்சேர்ந்த வேறு யாரேனுக்கும் பிரச்சினை இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
50க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் முக்கியத் துப்புகிடைத்ததைத் தொடர்ந்து அந்த கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் 2 மாணவர்கள்உள்பட 3 பேர் சிக்கினர்.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கோகுல், ஸ்ரீராம், சுதன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில்கோகுலும், சுதனும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீராம் அம்பத்தூர்தொழிற்பேட்டையில் வேலை செய்து வருகிறான்.
இந்த மூன்று பேரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பைக்வாங்குவதற்காகவும், செல்போன் வாங்குவதற்காகவும், புத்தாண்டு கொண்டாடத்திற்கு பணம்தேவைப்பட்டதாலும், அரவிந்த்தைக் கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டதாகவும்,
செவ்வாய்க்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்த அரவிந்த்தக்ை கடத்திச் சென்று அவனது வீடு அருகேஉள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் மாடிக்குக் கொண்டு சென்றதாகவும்,
பின்னர் அரவிந்த்தின் தந்தை கார்த்திகேயனுக்குப் போன் செய்து 5 லட்சம் பணம் தருமாறு மிரட்டியதாகவும்கூறியுள்ளனர்.
ஆனால் கார்த்திகேயன் போலீஸில் தகவல் தெரிவித்ததால் பயந்து போயும் ஆத்திரமடைந்தும், அரவிந்த்தைசெங்கல்லால் கொடூரமாக அடித்து கொலை செய்து பிணத்தை தொலைபேசி இணைப்பகத்திற்குப் பின்னால் உள்ளபுதரில் போட்டு விட்டு ஓடி விட்டதாக கூறியுள்ளனர்.
இந்தத் தகவல்களை இன்று மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.கைதான 3 பேரும் சிறுவர்கள் என்பதால் அவர்களை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திபோலீஸ் காவலில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அரவிந்த்தைக் கடத்த திட்டம் தீட்டி, செங்கல்லால் அடித்துக் கொலை செய்தவன்கோகுல்தான். இவனுக்குத் துணையாக சுதன், ஸ்ரீராம் ஆகியோர் இருந்துள்ளனர்.முதலில் கடத்தலை இவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. போலீஸார் உரிய முறையில்கேட்டதும் அனைத்தையும் கக்கியுள்ளனர்.
கோகுல் வாக்குமூல விவரம்:
அரவிந்த்தைக் கடத்தியது குறித்து கோகுல் போலீஸாரிடம் கொடுத்துள்ளவாக்குமூலம்:
நான், சுதன், ஸ்ரீராம் ஆகியோர் நண்பர்கள். ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டோம்.எங்கள் வயது கொண்டவர்கள் எல்லாம் மோட்டார் சைக்கிள், செல்போன் எனவைத்திருப்பதைப் பார்த்து நாமும் அதுபோல வாழ வேண்டும் என விரும்பினோம்.
மோட்டார் சைக்கிள், செல்போன் வாங்க பணம் வேண்டும். எனவே என்னசெய்யலாம் என 2 மாதத்திற்கு முன்பு ஆலோசித்தோம். அப்போதுதான் சினிமாவில்கடத்தி வைத்துக் கொண்டு பணம் பறிப்பது போன்ற காட்சிகளைப் பார்த்துஅதேபோல செய்யலாம் என தீர்மானித்தோம்.
யாரைக் கடத்தலாம் என பேச்சு வந்தபோது சுதன் என்னை கடத்தி வைத்து எனதுவீட்டிலேயே பணம் கேட்கலாம் என யோசனை கூறினானான். ஆனால் நான் அதைஏற்கவில்லை. இந் நிலையில்தான் நான் சைக்கிளில் லோகையா காலனி பகுதியில்போனபோது அரவிந்த் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
இதையடுத்து அவனை நெருங்கிய நான் வீடியோ கேம்ஸ் பார்க்கலாம் என கூறிசைக்கிளின் முன்பகுதியில் அமர வைத்துக் கொண்டேன். பின்னால் சுதன் உட்கார்ந்துகொண்டான்.
அப்பகுதியில் உள்ள எனது நண்பர் பிரவீனின் வீட்டுக்கு அரவிந்த்தை அழைத்துச்சென்றோம். பிரவீன் கிறிஸ்துமஸுக்காக தனது குடும்பத்துடன் வெளியூர்போயிருந்தான். அவனது வீட்டில் வளர்க்கும் நாய்க்கு சாப்பாடு போடுவதற்காகஎன்னிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்திருந்தார்கள்.
இதை பயன்படுத்தி பிரவீன் வீட்டுக்கு அரவிந்த்தை கொண்டு போய் அடைத்துவைத்தோம். உள்ளே போனதும் அவனது வாயை இறுக்கப் பொத்தினேன். இதில்அவன் மயங்கி விட்டான்.
பின்னர் நான் வெளியே வந்து அரவிந்த்தின் வீட்டுக்குப் போன் செய்து குரலைமுரட்டுத்தனமாக வைத்துக் கொண்டு 5 லட்சம் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால்அரவிந்த்தைக் கொன்று விடுவோம் என மிரட்டினேன்.
பிறகு வீட்டுக்கு வந்தேன். அப்போதும் அரவிந்த் மயங்கிய நிலையில்தான்இருந்தேன். இந்த சமயத்தில்தான் நாங்கள் அரவிந்த்தை கடத்திய விவரம்போலீஸாருக்குத் தெரிந்து விட்டதை அறிந்தோம்.
இதனால் பணம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தோம். மேலும் போலீஸில் சிக்கிவிடுவோம் என்றும் எனது நண்பர்கள் பயமுறுத்தினர். இதைத் தொடர்ந்து நான்அங்கே இருந்த கான்க்ரீட் செங்கல்லை எடுத்து (ஹாலோ பிளாக் செங்கல்)அரவிந்த்தின் தலையில் ஓங்கி அடித்தேன். இதில் மண்டை உடைந்து அரவிந்த் ரத்தவெள்ளத்தில் பிணமானான்.
பின்னர் இரவு 11.30 மணியளவில் அரவிந்த் உடலை சைக்கிளில் ஏற்றிக் கொண்டுவந்து அங்கே இருந்த புதரில் (இந்தப் புதர்ப் பகுதி அரவிந்த் வீட்டுக்கு வெகுஅருகேதான் உள்ளது) வீசி விட்டோம். முதலில் போரூர் பக்கம் கொண்டு போய்ஏ>யில் போட்டு விடலாம் என தீர்மானித்தோம்.
ஆனால் அவ்வளவு தூரம் கொண்டு போக முடியாது என்பதால் இங்கேயே போட்டுவிட்டோம். பின்னர் பிரவீன் வீட்டுக்குச் சென்று தூங்கினோம். காலையில்தான்எங்களது வீடுகளுக்குச் சென்றோம் என்று கூறியுள்ளான் கோகுல்.
கோகுல், சாலிகிராமம் அண்ணா தெருவில் வசித்து வரும் தத்தன் என்பவரின் மகன்.17 வயதாகும் இவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10வது படித்து வருகிறான்.சுதன் சாலிகிராமம் அருணாச்சலா தெருவைச் சேர்ந்தவன். இவனும் 10வது படித்துவருகிறான். இவனது வயது 16.
கோகுல் அரவிந்த்தைக் கொலை செய்தபோது வீட்டுக்கு வெளியே காவலுக்குநின்றவன் ஸ்ரீராம். இவன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலை செய்துவருகிறான்.
18 வயதுக்கு உட்பட்ட 3 பேர் படு சாவகாசமாக அரவிந்த்தைக் கடத்தி கொலைசெய்து வீட்டுக்கு அருகிலேயே கொண்டு வந்து போட்டுள்ளது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. அரவிந்த் காணாமல் போனது குறித்து கிட்டத்த 10 மணிக்குமுன்பாகவே அவனது தந்தை கார்த்திகேயன் போலீஸில் புகார் கொடுத்து விட்டார்.
ஆனால் போலீஸார் படு மெத்தனமாக தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளனர்.மின்னல் வேகத்தில் தேடுதல் வேட்டையை நடத்தியிருந்தால் ஒரு வேளைஅரவிந்த்தை உயிருடன் மீட்டிருக்க முடியும்.
ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு அப்பாவிச் சிறுவனை அநியாயமாக 3 சிறுவர்கள்கொலை செய்துள்ள சம்பவம் சென்னை மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக்கொடுத்துள்ளது.
அரவிந்த் உடல் தகனம்- விஜய்காந்த் கண்ணீர்:
இந் நிலையில் கொலை செய்யப்பட்ட அரவிந்த்தின் உடல் போரூர் சுடுகாட்டில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அரவிந்த் வீடு உள்ள அதே பகுதியில் வசித்துவரும் நடிகர் விஜயகாந்த், இயக்குநர் ஹரி உள்ளிட்டோர் சிறுவன் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அரவிந்த்தின் பெற்றோருக்கு விஜயகாந்த் ஆறுதல் கூறினார். பின்னர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், மிகக் கொடூரமாக அரவிந்த்கொல்லப்பட்டுள்ளான். ஈவு இரக்கமற்ற அந்தக் கொடியவர்களை, விசாரணையே இல்லாமல் தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும் என்றுஆவேசமாக கூறினார்.
விஜயகாந்த்தின் கருத்தையே அந்தப் பகுதி மக்களும் பிரதிபலித்தனர். விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானமக்கள் அரவிந்த் வீடு முன்பு கூடியிருந்து அழுதபடி இருந்தனர்.
பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பெண் போலீஸாரும் துக்கத்தை அடக்க முடியாமல் அழுதபடி நின்றிருந்தனர். மாலை 3 மணியளவில் அரவிந்த்தின் உடல்தகனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
போரூர் சுடுகாடு வரையிலும் சாலையின் இரு மருங்கிலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி நின்று அரவிந்த்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தங்களதுசொந்தப் பிள்ளையை இழந்தது போல அத்தனை பேரும் கண்ணீர் விட்டு அழுதது அப்பகுதியையே பெரும் சோகக் கடலில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications