சென்னையில் குவியும் மும்பை அழகிகள்!
சென்னை:புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை நட்சத்திர ஹோட்டல்களில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள நடன நிகழ்ச்சிகளில் ஆட மகிழ்விக்க மும்பையிலிருந்து 50க்கும்மேற்பட்ட அழகிகள் சென்னைக்கு வந்திறங்கியுள்ளனர்.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டு வருகிறது. நட்சத்திர ஹோட்டல்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டு வருகிறது.ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அமர்க்களப்படுத்த நட்சத்திரஹோட்டல்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்களதுநிகழ்ச்சிகளை தூள் கிளப்ப பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதில் டான்ஸுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதுதவிர மதுவிருந்து, ஜோடி நடனம் என பலவகை நிகழ்ச்சிகளுக்கு நட்சத்திர ஹோட்டல்கள்ஏற்பாடு செய்துள்ளன. சென்னையில் மட்டும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உள்பட75க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு குறைந்தது ரூ. 500 முதல் ரூ. ,5000 வரைடிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தைக் கட்டி விட்டுபுத்தாண்டு கொண்டாட்டத்தை மது விருந்துடன் தடபுடல் படுத்தலாம்.
6 பேர் அமரும் வகையிலான மேசைக்கு ரூ. 10,000 வரை வசூலிக்கும்ஹோட்டல்களும் உள்ளன. இதில் விசேஷம் என்னவென்றால் பார்வையாளர்களும்,நடன அழகிகளுடன் சேர்ந்து ஆட்டம் போட அனுமதிக்கப்படுவார்களாம்.
ஹோட்டல்களில் புத்தாண்டு நடன நிகழ்ச்சிக்காகவே மும்பையிலிருந்து 50க்கும்மேற்பட்ட அழகிகள் வரவழைக்கப்படுகிறார்களாம். இதுவரை 50 பேர் வந்துள்ளனர்.தொடர்ந்து பல அழகிகள் வரவுள்ளனராம்.
மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து இவர்கள் வருகிறார்கள்.
அழகிகள் வருகையைத் தொடர்ந்து டிக்கெட் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்ட ஆட்டம், பாட்டத்தின்போது யாரும் எல்லை மீறக் கூடாது,திறந்தவெளிகளில் மது அருந்தி விட்டு ஆட்டம் போடக் கூடாது, ஜோடியாகநடனமாடுபவர்கள் நாகரீகமாகவும், அத்துமீறலில் இறங்காமலும் நடந்து கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை போலீஸார் ஏற்கனவேவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications