புஷ் மகிழ்ச்சி -வாடிகன் கவலை
கிராபோர்ட்:சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டிருப்பது ஈராக் வரலாற்றில் முக்கிய வரலாற்று மைல் கல், ஆனால் இதனால்ஈராக்கில் வன்முறை முடிவுக்கு வரும் என்று கூற முடியாது என அமெ>க்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
அதேபோல இங்கிலாந்தும் சதாம் தண்டனையை வரவேற்றுள்ளது.
சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து டெக்ஸாலிருந்து ஜார்ஜ் புஷ் வெளியிட்டஅறிக்கையில், ஈராக் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல் கல் ஆகும். ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் ஈராக்குக்கு இது மிகவும் அவசியம் ஆகும்.
சதாம் உசேனை நீதியின் முன் நிறுத்தி தண்டனை கொடுத்ததால் மட்டும் ஈராக்கில் வன்முறை நின்று விடாது எனகூற முடியாது. ஆனால் ஈராக் மக்களுக்கு இது முக்கியமான ஒரு நிகழ்வாகும்.
ஜனநாயக ஆட்சியை தங்களது விருப்பம் போல அமைத்து, அதை நிர்வகித்து, தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள தற்போது வழி பிறந்துள்ளது என்று கூறியுள்ளார் புஷ்.
இங்கிலாந்து வரவேற்பு:
சதாம் தூக்கிலிடப்பட்டது குறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மார்கரெட் பெக்கெட் கூறுகையில், ஈராக்மக்களுக்கு இழைத்த குற்றத்திற்கான தண்டனை சதாமுக்குக் கிடைத்துள்ளது.
சதாம் உசேன் ஈராக் நீதிமன்றத்தில் விசா>க்கப்பட்டு அவருக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. இதை நான்வரவேற்கிறேன். ஈராக் மக்களுக்கு சதாம் இழைத்த பல குற்றங்களில் சிலவற்றுக்குத் தண்டனை கிடைத்துள்ளது.அதை தற்போது அவர் சந்தித்துள்ளார்.
இங்கிலாந்து மரண தண்டனையை எதிர்க்கும் ஒரு நாடு. ஈராக்கில் மட்டுமல்ல உலகின் எந்தப் பகுதியிலும் மரணதண்டனை இருக்கக் கூடாது என இங்கிலாந்து விரும்புகிறது. மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் எனஇங்கிலாந்து விரும்புகிறது. இதை ஈராக் அரசிடமும் நாங்கள் தெளிவாக தெ>வித்திருந்தோம்.
இருப்பினும் ஈராக் ஒரு சுதந்திர நாடு. அந்த நாட்டு முடிவை நாங்கள் மதிக்கிறோம். ஈராக் தொடர்ந்து பலசவால்களை சந்தித்து வருகிறது. தற்போது பல கட்சிகள் இணைந்த ஜனநாயக அரசு அமைந்துள்ளது.
ஈராக் அரசுடன் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி செயல்படுவோம். ஈராக் வளம் பெறவும், அந்நாட்டுமக்கள் பாதுகாப்பாக வாழவும் இங்கிலாந்து துணை நிற்கும் என்றார் பெக்கெட்.
ஈராக் மீதான போரில் அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளியாக இங்கிலாந்து விளங்கியது. ஈராக்கில் 7,200இங்கிலாந்து வீரர்கள் இன்னும் நிலை கொண்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
வாடிகன் கவலை:
சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட செயலுக்கு கத்தோலிக்க மதத்தினரின் புனித தலைமையகமான வாட்டிகன் ஏமாற்றமும், கவலையும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வாடிகன் சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இது மிகவும் சோகமான ஒரு சம்பவம். இதன் மூலம் பழிவாங்கும் செயல்கள்அதிகரிக்கும். புதிய பிரச்சினைக்கு இப்போது வித்திடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
லிபியா 3 நாள் துக்கம்:
சதாமின் தூக்கு தண்டனையை அடுத்து 3 நாள் துக்கம் அனுசரிப்பதாக லிபியா அறிவித்துள்ளது.
லிபிய அதிபர் கடாபி கூறுகையில், பகரீத் கொண்டாட்டங்களை ஒத்திவைத்துவிட்டு இந்த துக்கம் அனுசரிக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications