2 சித்தாள்களை கொன்று புதைத்த கொத்தனார் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி:தன்னிடம் சித்தாள் வேலை பார்த்து வந்த 2 பெண்களை கொன்று புதைத்தகொத்தனாரை திருச்சி போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருச்சி துவாக்குடி அருகே உள்ள பர்மா காலனியைச் சேர்ந்தவர் நடராஜன். 37வயதாகும் இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவருக்கு2 குழந்தைகள் உள்ளனர்.

இவரிடம் பார்வதி என்ற 21 வயது பெண் கடந்த 7 மாதங்களாக சித்தாளாக வேலைபார்த்து வந்தார். அப்போது பார்வதியை தனது காம வலையில் சிக்க வைத்துஉல்லாசம் அனுபவித்து வந்தார் நடராஜன்.

இதனால் பார்வதி கர்ப்பமானார். இதைத் தொடர்ந்து தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளுமாறு நடராஜனிடம் கேட்டுள்ளார். ஆனால் கல்யாணம் செய்து கொள்ளமுடியாது என்று மறுத்து விட்ட நடராஜன், பார்வதியைக் கொலை செய்யத் திட்டமிட்டுஅவரது கழுத்தை பார்வதியின் தாவணியால் நெரித்துக் கொலை செய்தார்.

பின்னர் உடலை தான் வேலை பார்த்து வந்த இடத்திற்கு அருகே உள்ள கண்மாய்க்கரையில் குழி தோண்டிப் புதைத்து விட்டார். வேலைக்குப் போன பார்வதி வீடுதிரும்பாததால் அவரது பெற்றோர் நடராஜனிடம் விசாரித்துள்ளனர். அதற்கு தனக்குஎதுவும் தெரியாது என்று கூறிய நடராஜன், அவர்களை மிரட்டியுள்ளார்.

ஆனால் அசராத அவர்கள் பார்வதி குறித்துக் கூறாவிட்டால் போலீஸில் புகார்கொடுப்போம் என மிரட்டவே, பயந்து போன நடராஜன் அவராகவே போலீஸில்சரணடைந்தார்.

போலீஸாரிடம் பார்வதியைக் கொலை செய்து புதைத்த விவரத்தை அவர்தெரிவித்தார். இதையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் பார்வதிஉடலை தோண்டி எடுத்தனர். பின்னர் நடராஜனிடம் தீவிரமாக விசாரித்தபோதுமேலும் ஒரு பெண்ணை அவர் இதுபோல கொன்று புதைத்த தகவல் வெளியானது.

அந்தப் பெண்ணின் பெயர் விஜயா. அவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.அவருடன் நடராஜனுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அதேசமயம், வேறுஒருவருடனும் விஜயாவுக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 12ம் தேதி இரவு விஜயாவுக்காக வழக்கமாக சந்திக்கும் ஒருஇடத்தில் காத்திருந்தார் நடராஜன். ஆனால் விஜயா வரவில்லை. இதையடுத்து அவரதுவீட்டுக்குப் போனார் நடராஜன். அங்கு வேறு ஒருவருடன் சந்தோஷமாகஇருந்துள்ளார் விஜயா.

இதைப் பார்த்து கடுப்பான நடராஜன், மீண்டும் தான் காத்திருந்த இடத்திற்குத் திரும்பிவிஜயாவுக்காக காத்திருந்தார். இரவு பத்தரை மணியளவில் விஜயா அங்குவந்துள்ளார்.

அவரிடம் உன்னுடன் இருந்தது யார் என்று கேட்டுள்ளார் நடராஜன். யாராக இருந்தால்உனக்கென்ன, உனக்குத் தேவை நான்தானே என்று கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த நடராஜன், விஜயாவை பலமாக அடித்துள்ளார். அதில்தலையில் பலமாக அடிபட்டு விஜயா இறந்து விட்டார். இதையடுத்து அருகில் உள்ளமயானத்திற்குக் கொண்டு சென்று விஜயாவின் உடலைப் புதைத்து விட்டார்.

இதைத் தொடர்ந்து விஜயா புதைக்கப்பட்ட இடத்தையும் போலீஸார் தோண்டிப்பார்த்தனர். விஜயாவின் தலைமுடி, சில எலும்புகளை போலீஸார் மீட்டுள்ளனர்.

இருவரின் உடல்களையும் அவர்கள்தானா என்பதை உறுதி செய்வதற்காக மண்டைஓடு மற்றும் புகைப்படங்களை சென்னை தடவியல் ஆய்வகத்திற்கு போலீஸார்அனுப்பியுள்ளனர்.

தனக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக நடராஜன் கூறியுள்ளார். எனவேவிஜயா, பார்வதியைப் போல வேறு எந்தப் பெண்ணையும் நடராஜன் கொலைசெய்துள்ளாரா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+