வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் தொடக்கம்
சென்னை:வருமுன் காப்போம் திட்டத்தை முதல்வர் கருணாநிதி சென்னை அருகே பூந்தமல்லியில் தொடங்கி வைத்தார்.
கடந்த திமுக ஆட்சியில் ஏழை, எளியோருக்கு மருத்துவ வசதிகளை தரும் வருமுன் காப்போம் திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டு விட்டது.
இந்த நிலையில் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திமுக அரசு வருமுன் காப்போம் திட்டத்தைமறுபடியும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
திட்டத் தொடக்க விழா சென்னை அருகே பூந்தமல்லியில் நேற்று நடந்தது. முதல்வர் கருணாநிதி இத்திட்டத்தைத்தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ரூ. 128 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு நவீன வசதி கொண்ட ஆம்புலன்ஸ்களையும் அவர்மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், இந்தத் திட்டம் லட்சக்கணக்கான மக்களுக்குப் பயன்பட்ட திட்டம்.நோய் நொடியில்லாமல், வாழ, நோய் வருவதற்கு முன்பே எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்பதற்கானவழிமுறைகளை சொல்லும் வகையில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இடையில் வந்தவர்களால் இந்தத் திட்டம்ரத்து செய்யப்பட்டது.
இருள், ஒளி இரண்டையும் பார்க்கிறோம். இருள் ஆட்சியில், இந்த வருமுன் காப்போம் திட்டம் வாரிவீசப்பட்டது. மறுபடியும் இன்று தொடங்கியிருக்கிறோம். திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் நாட்டில் நல்லகாரியங்கள் நடக்கும். நல்ல காரியம் நடக்க மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். அதற்கு அடையாளம்தான் இந்தவிழா.
எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் பெரும் நோய்களைத் தவிர்க்க முடியும். வெள்ளைக்காரன் காலத்தில்பிளேக் நோய் இருந்தது. அந்த நோய்க்கு பிளேக் அம்மன் என்றும் அம்மை வந்தால் மாரியம்மன் என்றும்பெயரிட்டு விட்டார்கள். வெள்ளைக்காரன் காலத்திலேயே சூளுரைத்து அந்த நோயே இல்லாமல் போய் விட்டது.
பூந்தமல்லியில் இன்று 100 பேருக்கு வழங்கப்படும் நலத் திட்ட உதவிகள் அடுத்த ஒரு வருடத்தில்பல்லாயிரக்கணக்கில் விரிவுபடுத்தப்படும் என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications