இணையதளத்தில் பெரியாறு கிராபிக்ஸ்: கேரள சில்மிஷம்
தேனி:முல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்கள் பிணமாக தண்ணீரில் மிதப்பது போன்ற கிராபிக்ஸ் காட்சியைகேரள அரசு தனது இணையதளத்தில் வெளியிட்டு மீண்டும் விஷமப் பிரசாரத்தில் இறங்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே விஷமப் போக்கைக் கடைப்பிடித்து வரும் கேரளஅரசு, முல்லைப் பெரியாறு அணை உடைந்து, தண்ணீர் கிராமங்களை சூழ்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள்தண்ணீரில் பிணங்களாக மிதப்பது போன்ற கிராபிக்ஸ் சிடியை இடுக்கி மாவட்ட கிராமங்களிடையே உலவச்செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சிடியை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்போவதாகவும் தமிழக அரசு எச்சரித்தது. இதைத் தொடர்ந்து கிராமங்களில் உலவ விட்ட சிடிக்களை கேரள அரசுவேகம் வேகமாக திரும்பப் பெறப்பட்டது.
ஆனால் தற்போது மீண்டும் தனது விஷமப் பிரசாரத்தை கேரள அரசு தொடங்கியுள்ளது. இந்த முறைஅதிகாரப்பூர்வமாக, தனது மாநில அரசின் இணையதளத்தில் இந்த கிராபிக்ஸ் காட்சிகளை வெளியிட்டுள்ளது.முதல்வரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ( http://keralacm.gov.in) இது இடம்பெற்றுள்ளதுதான்விஷமத்தனத்தின் உச்சம்.
அணை உடைந்து வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு கிராம மக்கள் தண்ணீரில் பிணமாக மிதப்பது போன்றகாட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் அணை குறித்த பல தவறான தகவல்களையும் கேரள அரசுவெளியிட்டுள்ளது.
கேரள அரசு தனது இணைய தளத்தில் இதுபோல விஷமப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது விவசாயிகளிடையேபெரும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications