புத்தாண்டு, பக்ரீத்: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பக்ரீத் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு பிறப்பையொட்டி தலைவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
முதல்வர் கருணாநிதி:
தமிழக மக்களின் பேராதரவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து, அதன் விளைவாக 2 ரூபாய்க்கு ஒரு கிலோஅரசி, விவசாயிகளுக்கு ஏறத்தாழ ரூ. 7 ஆயிரம் கோடி அளவுக்கு கூட்டுறவு வங்கிக் கடன்கள் ரத்து,ஏழைகளுக்கு இலவச டிவி வழங்கும் திட்டத்தின் தொடக்கம்.
அதேபோல நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிஅதன் இரண்டாம் கட்டத்தின் நிறைவு, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டநடைமுறை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கிப் பொங்கல்பரிசும் அளித்துள்ளமை.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகள் வழங்கியுள்ளமை முதலியவரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளை நிறைவேற்றிச் சாதனை முத்திரைகளைப் பதித்துள்ள இனிய நினைவுகளுடன்2006 நம்மை கடந்து செல்கிறது.
தமிழ் சமுதாயத்தின் மேன்மைக்காகப் பல்வேறு புதுமைகளை விளைத்திலும் துடிப்போடு 2007ம் ஆண்டுபிறக்கிறது. இந் நாளில் மக்கள் அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தெரிந்த இனத்தோடு தேர்ந் தெண்ணிச் செய்வார்க்(கு)
அரும்பொருள் யாதொன்றும் இல்
தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து தாமும் நன்கு சிந்தித்துச்செய்ததால் ஆகாதது ஒன்றுமில்லை எனும் அய்யன் திருவள்ளுவரின் அருங் குறளும், அதன் பொருளும் கூறும்வழியில் இதயத்தில் தூய்மை, எண்ணத்தில் நேர்மை, செயலில் உறுதி, சிங்க மனைய இளைய சமுதாயத்தின்தோழமை இவற்றை துணையாகக் கொண்டு திட்டமிட்டு தொழில் வளம் பெருக்கிடுவோம் என்று கூறியுள்ளார்கருணாநிதி
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா:
இந்தப் புத்தாண்ட எனதருமை தமிழக மக்களுக்கு மன உறுதியை வலுப்படுத்துவதாகவும், புதிய நம்பிக்கையைஊட்டுவதாகவும், புத்தெழுச்சியை அளிப்பதாகவும், சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலை அளிப்பதாகவும்அமையட்டும்.
இப்புத்தாண்டில் சமத்துவம், சமாதானம், சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை தழைத்தோங்கட்டும். 2007ம்ஆண்டு அமைதியையும், மகிழ்ச்சியையும், செழுமையையும் வளமுடன் வழங்கும் புத்தாண்டாக அமையட்டும்என்று கூறியுள்ளார்.
காங். தலைவர் கிருஷ்ணசாமி:
ஆங்கிலப் புத்தாண்டும், பக்ரீத் பெருவிழாவும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகின்றன. கடந்த ஆண்டில்நடைபெற்ற நல்லவைகள் புதிய ஆணடிலும் தொடரட்டும். தீயவைகள் மீண்டும் வராமல் மறைந்து ஒழியவேண்டும்.
அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளாக ஜனவரித் தலைநாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அறிவியலில்,கணிணியில் கற்பனைக்கும் எட்டாத சாதனைகளை மனிதகுலம் படைத்துக் கொண்டிருக்கிற சூழ்நிலையில், மனிதநேயமும், மனிதாபிமானமும், சிதைந்து வருவது , வெறுப்பும், வன்முறையும், ரத்தக் களறிகளும் வேகமாகவளர்ந்து வருவதும், மனித குலத்தின் அமைதிக்கு விடுவிக்கப்படுகின்ற அறை கூவல் ஆகும்.
இந்த ஆண்டு இஸ்லாமியப் பெருமக்கள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகையும் ஜனவரி முதல் நாளேஅமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
இஸ்லாமியப் பெருமக்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களையும், தமிழக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டுவாழ்த்துக்களையும், மதிமுக சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
தமிழக மக்கள் பல துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். நல்வாழ்வு பெற வேண்டும். சமத்துவ, சம வாய்ப்புஅளிக்கும் புதிய சமுதாயத்தை உருவாக்க இந்த புத்தாண்டு வழி வகுக்கும்.
இவர்கள் தவிர பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
பக்ரீத் வாழ்த்து:
முதல்வர் கருணாநிதி:
ஈத் உல் அஸா என்னும் நோண்பைக் குறிக்கும் இந்த பக்ரீத் பெருநாள், கடமையைச் செய்வதாலேயேஉண்மையான இன்பம் பிறக்கிறது என்பதை உணர்த்தும் நன்னாளாகும்.
இஸ்லாமின் சகோதரத்துவ சிந்தனை, உயர்வான பண்புகளை வளரச் செய்கிறது. சுய நலச் சிந்தனையை அகற்றிவிடுகிறது.
தனக்கு மட்டுமே நன்மையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. எல்லோர்க்கும் நன்மைகள்கிடைக்கும் வகையில் கடமைகளைச் செய்ய வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
ஆளுநர் பர்னாலா:
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையன்று, தியாக உணர்வும், சகோதரத்துவமும், அமைதியும், நல்லிணக்க.ம்பெருகட்டும், தேசத்தின் ஒற்றுமையை நிலை நாட்டுவோம்.
ஜெயலலிதா:
சுயநலமின்றி ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற சிந்தனையை நினைவூட்டும்தியாகத் திருநாள் பக்ரீத்.
ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் சகோதரத்துவத்தையும்பேணிக்காக்க இந்த தியாகத் திருநாளில் நாம் அனைவரும் சபதம் எடுப்போம் என்று கூறியுள்ளார்.
விஜயகாந்த் உள்ளிட்ட மேலும் பல தலைவர்களும் பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications