ஈழம்: ரவிசங்கர் உதவ தமிழ் எம்பிக்கள் கோரிக்கை
பெங்களூர்:ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் நிறுவனரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கள் ஈழப் பிரச்சினையில் அமைதித் தீர்வு ஏற்படஉதவ வேண்டும் என இலங்கைத் தமிழ் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்த ஆர்.எஸ்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் எம்.பிக்கள் குழுமுதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசியது. பின்னர் டெல்லி சென்ற இக்குழுவினர் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்துப் பேசினர்.
இந்த நிலையில் தமிழ் எம்.பிக்கள் குழு பெங்களூர் சென்று ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் நிறுவனரானஆன்மீகத் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை சந்தித்துப் பேசினர். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண தான்உதவத் தயாராக இருப்பதாக ஏற்கனவே ரவிசங்கர் கூறியுள்ளார். சமீபத்தில் இலங்கைக்கும் சென்று அவர்இதுகுறித்துப் பேசினார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் ரவிசங்கரை சந்தித்த தமிழ் எம்.பிக்கள், ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு ஏற்பட தனதுசெல்வாக்கை ரவிசங்கர் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இலங்கை அரசு மற்றும் இந்திய அரசிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களின் துயர்துடைக்க ரவிசங்கர் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.
எங்களது கோரிக்கையை ஏற்ற ரவிசங்கரும், இலங்கைப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு ஏற்பட உடனடிநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கை தான் கேட்டுக் கொள்வதாகஉறுதியளித்தார்.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தற்போது தலையிட வேண்டிய உகந்த நேரம் வந்து விட்டது. இதில் தாமதம்ஏற்பட்டால் பல அப்பாவி உயிர்கள் பறிபோவதைத் தடுக்க முடியாது.
இந்தியாவின் தலையீட்டால் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நம்பிக்கை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ரவிசங்கர் எங்களிடம் கூறுகையில், வட இலங்கையில் தற்போது நிலைமை மோசமாக உள்ளது. உணவுவிநியோகம் மிகவும் மோசாக உள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இரு தரப்பும் அமைதியானமுறையில் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்றார்.
விடுதலைப்புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றுகுவித்து வருகிறது என்றார் பிரேமச்சந்திரன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications