பிரபல நகைக்கடை அதிபர் மனைவியுடன் தற்கொலை
சென்னை:சென்னை தி.நகரில் உள்ள பிரபல உம்மிடி பங்காருச் செட்டி நகைக் கடை அதிபர் உம்மிடி பங்காருச் செட்டி தனதுமனைவியுடன் விஷம் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தி.நகர் வால்மீகி தெருவில் பங்காருச் செட்டி ஜூவல்லர்ஸ் நகைக் கடை உள்ளது. சென்னை நகரின் மிகவும்பிரபலமான நகைக் கடைகளில் இதுவும் ஒன்று.
இதன் உரிமையாளர் பங்காருச் செட்டி (62), இவரது மனைவி உஷா (56). இவர்களுக்கு நீரஜ்குமார் என்றமகனும், ரேகா என்ற மகளும் உள்ளனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீபெரும்புதூருக்கு தனது மனைவியுடன் சென்றார் பங்காருச் செட்டி. அங்குள்ளஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடந்த சொர்க்காசல் திறப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பெருமாளைவணங்கினார்.
தேவராஜ் என்பவருக்குச் சொந்தமான விடுதி வளாகத்தில் மனைவியுடன் அவர் தங்கியிருந்தார். இந்த நிலையில்நேற்று இரவு பத்து மணியளவில் தனது மனைவியுடன் பங்காருச் செட்டி வாயில் நுரை தள்ளியபடி மாடிப்படிக்கட்டில் பிணமாகக் கிடந்தார்.
இதைப் பார்த்த விடுதி உரிமையாளர் தேவராஜ் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்துவந்த போலீஸார் பிணங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்பப் பிரச்சினை தொடர்பாக பங்காருச் செட்டி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர்கள் சாப்பிட்டசாப்பாட்டில் விஷம் கலந்திருந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. அமல்ராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பங்காருச் செட்டி மனைவியுடன்இறந்த செய்தி அறிந்ததும் அவர்களது மகன், மகள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும்ஸ்ரீபெரும்புதூர் விரைந்தனர்.
பங்காருச் செட்டியின் சகோதரர்கள் அனைவரும் நகைத் தொழிலில்தான் ஈடுபட்டுள்ளனர். சென்னை நகரின்பல்வேறு பகுதிகளில் இவர்கள் தனித் தனியாக நகைக் கடைகளை நடத்தி வருகின்றனர்.
தீவிர பெருமாள் பக்தரான பங்காருச் செட்டி, வைகுண்ட ஏகாதசியன்று உயிர் பிரிந்தால் சொர்க்கத்திற்குச்செல்லலாம் என்று கூறப்படும் ஐதீகத்தை நம்பி மனைவியுடன் ஏகாதசி நாளன்று தற்கொலை முடிவைஎடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications