மரணத்தை தைரியமாக சந்தித்த சதாம்
பாக்தாத்:தூக்குக் கயிற்றை மிகுந்த தைரியத்துடன் சந்தித்து சதாம் உசேன் மரணத்தைத்தழுவியதாக தூக்குத் தண்டனை நிறைவேற்றியபோது உடனிருந்தவர்கள்தெரிவித்துள்ளனர்.
சதாம் உசேனின் கடைசி நிமிடங்கள் குறித்து தூக்குத் தண்டனைநிறைவேற்றப்பட்டபோது உடன் இருந்த ஈராக் பிரதமர் நூர் அலி மாலிக்கிக்குநெருக்மான அரசியல் தலைவரான சமி அல் அஸ்காரி கூறியதாவது:
சதாம் உசேனுக்கு 25 நிமிடங்களில் தூக்குத் தண்டனை நிறைவேற்றி முடிக்கப்பட்டது.மிகவும் சிறிய அறையில் தூக்கு மேடை தயாரிக்கப்பட்டிருந்தது. கையில் பிடித்ததிருக்குரானுடன் உள்ளே அழைத்து வரப்பட்டார் சதாம்.
அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர வைக்கப்பட்டார். தலையில் இருந்த தொப்பியைஎடுக்கும்படி கூறியதும் மறு பேச்சு பேசாமல் தொப்பியை எடுத்து விட்டார்.
அப்போது நீதிபதி ஒருவர், சதாமிடம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதுதொடர்பான உத்தரவை வாசித்தார். அதை அமைதியாக கேட்ட சதாம், உரத்த குரலில்ஈராக் வாழ்க, ஈராக் மக்கள் வாழ்க, பாலஸ்தீனம் வாழ்க என்று கோஷமிட்டார்.
பின்னர் சதாமின் கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டன. அப்போது தன்னிடம் இருந்தகுரானை அருகிலிருந்தவரிடம் கொடுத்து தனது நண்பரிடம் (பெயர்குறிப்பிடப்படவில்லை) கொடுத்து விடும்படி கேட்டுக் கொண்டார் சதாம்.
அதன் பின்னர் கைகள் கட்டப்பட்ட சதாம் தூக்கு மேடையின் மீது கொண்டுவரப்பட்டார். அப்போது அவரது முகத்தை மூட முயன்றனர். ஆனால் அதை மறுத்துவிட்ட சதாம் முகம் தெரியும் படியே தூக்கிலிடுங்கள் என்று நிதானமாகவும்,உறுதியாகவும் கூறினார்.
இதையடுத்து முகம் மூடப்படவில்லை. தூக்கு மேடையில் நின்றபோது குரான்வாசகங்களை முனுமுனுத்தபடியே இருந்தார் சதாம். அவரது கழுத்தில் கருப்புத்துணியை வைத்து அதன் மேல் சுருக்குக் கயிற்றை மாட்டினர்.
அந்த சமயத்திலும் கூட சதாம் மிகவும் அமைதியாகவும், உறுதியாகவும் நின்றிருந்தார்.இதைத் தொடர்ந்து அந்த அறையில் இருந்த அனைவரும் ஒருபக்கம் கூடி நின்றனர்.
ஒரு அதிகாரி சைகை செய்தவுடன், சதாமின் காலுக்குக் கீழே இருந்த பலகையைவிலக்கும் விசை இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சதாமின் கழுத்தை தூக்குக் கயிறுசுருக்கியது. சதாமின் உடல் எடை காரணமாக கயிறு கழுத்தை இறுக்கியபோதுஎலும்புகள் உடைந்த சப்தம் கேட்டது.
சில விநாடிகளிலேயே உயிரிழந்தார் சதாம். பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து சதாமின்உடல் கயிற்றிலிருந்து விடுவிக்கப்பட்டது. அவரது உடலை டாக்டர் பரிசோதித்துஅவர் இறந்து விட்டதை உறுதி செய்தார்.
இதையடுத்து அங்கு கூடியிருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிசந்தோஷத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதை ஈராக் அமைச்சர்கள், சில எம்.பிக்கள்,நீதித்துறை, தனி நீதிமன்ற பிரதிநிதிகள், ஒரு டாக்டர் உள்ளிட்ட மொத்தம் 15 பேர்நேரில் பார்வையிட்டனர் என்றார் அஸ்காரி.
சதாம் உசேன் தூக்கிலிடப்படுவது குறித்து அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு முன்பேதகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாம். சதாமைத் தூக்கில் போடுவதற்கான அனைத்துஏற்பாடுகள் குறித்தும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ஹாட்லிபுஷ்ஷிடம் விலாவாரியாக விளக்கியுள்ளார்.
சதாம் தூக்கில் தொங்கியபோது கிராபோர்ட் நகரில் உள்ள தனது பண்ணை இல்லத்தில்புஷ் தூங்கிக் கொண்டிருந்தாராம்.
ஹஜ் யாத்ரீகள் கடும் அதிருப்தி:
இதற்கிடையே லட்சக்கணக்கான முஸ்லீம்கள் மெக்காவில் புனித யாத்திரயைமேற்கொண்டுள்ள நிலையில் சதாமை தூக்கிலிட்ட செயல் உலக முஸ்லீம்களைஇழிவுபடுத்தும் செயல் மெக்காவில் புனித யாத்திரை மேற்கொண்டுள்ள முஸ்லீம்யாத்ரீகர்கள் கடும் அதிருப்தியும் கோபமும் வெளியிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications