டெல்லியில் குண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது
டெல்லி:டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வெடிகுண்டுகளை நிகழ்த்துவதற்காக பயங்கரவெடிகுண்டுகளுடன் வந்த பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளைபோலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து சிறப்புப் பிரிவு இணை ஆணையர் கர்னால் சிங் கூறுகையில், காஷ்மீரைச் சேர்ந்த, பாகிஸ்தானின்லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த சமியுல்லா, அலி முகம்மது ஆகிய இருவரையும் டெல்லி ரயில்நிலையத்திற்கு அருகே உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் வைத்து போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
இவர்களிடம் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இருந்தது தெரிய வந்தது. பஹர்கஞ்ச் மார்க்கெட்டில் இந்தவெடிகுண்டுகளை வைக்க இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
ஜம்முவிலிருந்து சென்னை செல்லும் அந்தமான் எக்ஸ்பிரஸில் இவர்கள் இருவரும் பயணித்தனர். இந்த ரயில்டெல்லி நிலையத்தில் அரை மணி நேரம் நிற்கும். அந்த சமயத்தில் இறங்கி மார்க்கெட்டில் குண்டு வைத்து விட்டுஅதே ரயிலில் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
சரியான சமயத்தில் போலீஸார் இவர்களை கைது செய்து விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரயில் நிலையம் முழுவதும் தீவிரமாக சோதனையிடப்பட்டது.ரயில் நிலையம் அருகே உள்ள பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
பம்பா: வெடிபொருளுடன் மர்ம நபர் கைது
இதற்கிடையில் கேரள மாநிலம் பம்பாவில் வெடிகுண்டுடன் திரிந்த ஒரு நபரை போலீஸார் வளைத்துப் பிடித்துக்கைது செய்தனர்.
சபரிமலையின் அடிவாரத்தில் இருப்பது பம்பா. இங்கு நேற்று கேரள மாநிலம் சேர்த்தலா, பள்ளிப்புரம் பகுதியைச்சேர்ந்த பனப்பரம்பில் ரவீந்திரன் என்பவர் வெடிபொருட்களுடன் உலவிக் கொண்டிருந்தார்.
சந்தேகத்தின் பேரில் அவரை போலீஸார் பிடித்து விசாரித்தபோது அவரிடமிருந்து 20க்கும் மேற்பட்ட பட்டாசுகள்மற்றும் வெடிபொருட்கள் சிக்கின. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications